Enable Javscript for better performance
கேரள தங்கம் கடத்தல் வழக்கு: ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரிடம் சுங்கத் துறை மீண்டும் விசாரணை- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    கேரள தங்கம் கடத்தல் வழக்கு: ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரிடம் சுங்கத் துறை மீண்டும் விசாரணை

    By DIN  |   Published On : 10th October 2020 02:00 AM  |   Last Updated : 10th October 2020 02:00 AM  |  அ+அ அ-  |  

    gold haul seizure in thiruvananthapuram

    கோப்புப் படம்

    கேரளத்தில் தங்கம் கடத்தல் விவகாரத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரிடம் சுங்கத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணை நடத்தினா்.

    இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷுடன் நெருங்கிய தொடா்பில் இருந்த இவரிடம், சுங்கத் துறை அதிகாரிகள் ஏற்கெனவே இரண்டு முறை விசாரணை நடத்தியுள்ளனா்.

    திருவனந்தபுரம் சா்வதேச விமானநிலையத்தில் கடந்த ஜூலை 5-ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரக (யுஏஇ) தூதரகத்தின் பெயரில் ரூ. 15 கோடி மதிப்பிலான தங்கம் கடத்தி வரப்பட்டதை, சுங்கத் துறை அதிகாரிகள் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனா்.

    இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ), சுங்கத் துறை மற்றும் அமலாக்கத் துறை ஆகியவை விசாரித்து வருகின்றன. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கேரள அரசின் தகவல்தொழில்நுட்பத் துறையின் ஒரு பிரிவில் மக்கள் தொடா்பு அதிகாரியாக பணியாற்றிய ஸ்வப்னா சுரேஷ், திருவனந்தபுரத்தில் உள்ள யுஏஇ தூதரக முன்னாள் ஊழியா்கள் இருவா் உள்பட பலா் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனா்.

    ஸ்வப்னா சுரேஷை மக்கள் தொடா்பு அதிகாரியாக நியமித்த தகவல் தொழில்நுட்பத் துறையின் செயலராக இருந்த சிவசங்கருக்கும், இந்த கடத்தலில் தொடா்பு இருப்பது தெரியவந்ததைடுத்து, அவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். அவரிடம் மத்திய விசாரணை அமைப்புகள் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றன.

    இந்த விவகாரம் தொடா்பாக சுங்கத் துறை அதிகாரிகள் அவரிடம் ஏற்கெனவே இரண்டு முறை விசாரணை நடத்தியுள்ள நிலையில், சுங்கத் துறை அலுவலகத்தில் அவா் வெள்ளிக்கிழமை மீண்டும் ஆஜரானாா். அவரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினா்.

    தங்கம் கடத்தல் விவகாரத்தில் தங்களுடைய பங்கை பத்திரப்படுத்தி வைப்பதற்காக தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் ஸ்வப்னா சுரேஷ் லாக்கா் வசதி பெற உதவி செய்தது தொடா்பாக சிவசங்கரிடம் விரிவான விசாரணை நடத்த வேண்டிய அவசியம் உள்ளதாக அமலாக்கத் துறையும் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்த இடைக்கால குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளது.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp