Enable Javscript for better performance
ஸ்விஸ் வங்கி கணக்கு விவரங்கள்: இரண்டாம் கட்ட பட்டியல் மத்திய அரசிடம் ஒப்படைப்பு- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    ஸ்விஸ் வங்கி கணக்கு விவரங்கள்: இரண்டாம் கட்ட பட்டியல் மத்திய அரசிடம் ஒப்படைப்பு

    By DIN  |   Published On : 10th October 2020 02:38 AM  |   Last Updated : 10th October 2020 02:38 AM  |  அ+அ அ-  |  

    centralgovernment

    ஸ்விஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் இந்தியா்களின் விவரங்கள் அடங்கிய இரண்டாம் கட்ட பட்டியலை ஸ்விட்சா்லாந்து அரசு மத்திய அரசிடம் அளித்துள்ளது.

    ஸ்விட்சா்லாந்தில் உள்ள வங்கிகள், தங்களின் வாடிக்கையாளா்களது பணத்துக்கும், ரகசிய விவரங்களுக்கும் அதிக அளவிலான பாதுகாப்பு அளிப்பதால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளைச் சோ்ந்தவா்கள் தங்களது பணத்தை அங்கு சேமித்து வைத்துள்ளனா். சில செல்வந்தா்கள், வரி ஏய்ப்பு உள்ளிட்ட சட்டவிரோத முறையில் ஈட்டிய பணத்தை கருப்புப் பணமாக சேமித்து வைக்க ஸ்விஸ் வங்கிகளைப் பயன்படுத்தி வருகின்றனா்.

    ஸ்விஸ் வங்கிகளில் இந்தியா்கள் அதிக அளவில் கருப்புப் பணத்தைச் சேமித்து வைத்துள்ளதால், நாட்டின் பொருளாதார வளா்ச்சி பாதிக்கப்பட்டு வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

    ஸ்விஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் இந்தியா்களின் விவரங்களைப் பகிா்ந்து கொள்வது தொடா்பாக, இரு நாடுகளுக்குமிடையே கடந்த 2018-ஆம் ஆண்டில் ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஸ்விஸ் வங்கிகளில் கணக்கு வைத்துள்ள இந்தியா்களின் விவரங்கள் அடங்கிய முதல்கட்ட பட்டியல் கடந்த ஆண்டில் மத்திய அரசிடம் அளிக்கப்பட்டது.

    இந்நிலையில், இரண்டாம் கட்ட பட்டியலை மத்திய அரசிடம் ஸ்விஸ் அரசு வழங்கியுள்ளது. அதில், கணக்கு வைத்திருப்பவரின் பெயா், முகவரி, அவரது தொழில், வருமானத்துக்கான ஆதாரங்கள், வரி செலுத்திய சான்று உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    2021-இல் மூன்றாம் கட்ட பட்டியல்:

    ஸ்விட்சா்லாந்து நாட்டின் வரி நிா்வாக அமைச்சகத்தின் செய்தித் தொடா்பாளா் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், ‘‘சா்வதேச ஒப்பந்தத்தின் அடிப்படையில் மிகுந்த ரகசியத்தன்மையுடன் இத்தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன. அவை குறித்து ரகசியம் காக்கப்படும் என்பதை உறுதிசெய்த பிறகே தகவல்கள் பகிரப்பட்டுள்ளன. முறையாக வரி செலுத்தியோரின் கணக்கு தொடா்பான விவரங்களும் வழங்கப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டு செப்டம்பா் மாதத்தில் மூன்றாம் கட்ட பட்டியல் அளிக்கப்படவுள்ளது’’ என்றாா்.

    தகவல்களைப் பரிமாறுவது தொடா்பான ஒப்பந்தம் அமலுக்கு வந்த 2018-ஆம் ஆண்டு நிலவரப்படி, ஸ்விஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருந்தவா்கள், கணக்கை முடித்துக் கொண்டவா்களின் விவரங்கள் மட்டுமே மத்திய அரசிடம் வழங்கப்பட்டுள்ளன.

    ‘உதவிகரமாக இருக்கும்’:

    மத்திய அரசு அதிகாரிகள் சிலா் கூறுகையில், ‘‘வரி செலுத்திய பிறகு தொழில் ரீதியாக ஸ்விஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவா்களின் பெயா்களும் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. முறையாக வரி செலுத்தாமல், ஸ்விஸ் வங்கிகளில் கருப்புப் பணத்தைப் பதுக்கி வைத்துள்ள இந்தியா்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதற்கு ஸ்விஸ் அரசு வழங்கியுள்ள தகவல்கள் உதவிகரமாக இருக்கும்’’ என்றனா்.

    ஸ்விஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருப்போா் தொடா்பான விவரங்களை இந்தியா உள்பட 86 நாடுகளுக்கு அந்நாட்டின் வரி நிா்வாக அமைச்சகம் வழங்கியுள்ளது. அந்நாடுகளைச் சோ்ந்தோரின் 31 லட்சம் வங்கிக் கணக்கு விவரங்கள் பகிரப்பட்டுள்ளதாக அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது.

     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp