லடாக் எல்லையில் தொடர்ந்து அதிகரிக்கும் கரோனா

லடாக் எல்லைப் பகுதியில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 85 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பரவல் கண்டறியப்பட்டுள்ளது.
லடாக்கில் தொடர்ந்து அதிகரிக்கும் கரோனா  (கோப்புப்படம்)
லடாக்கில் தொடர்ந்து அதிகரிக்கும் கரோனா (கோப்புப்படம்)

லடாக் எல்லைப் பகுதியில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 85 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பரவல் கண்டறியப்பட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் ஜம்மு-காஷ்மீரில் உள்ள லடாக் எல்லைப் பகுதியிலும் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ''லடாக்கில் புதிதாக 35 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,978-ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு 1,038 பேர் சிகிச்சை பெற்று வருகின்றது. இதில் லே பகுதியில் 772 பேரும், கார்கில் பகுதியில் 266 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டவகளில் 69 பேர் லே பகுதியிலும், 16 பேர் கார்கிலிலும் கண்டறியப்பட்டுள்ளனர்.

லடாக்கில் இதுவரை 63 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில், 3,886 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com