இந்தியாவில் கரோனா மீட்பு விகிதம் 85.81 சதவீதமாக உயர்வு

இந்தியாவில் கரோனா சிகிச்சை பெற்றுக் குணமடைந்தோர் விகிதம் 85.81% ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. 
nCoV: India's tally reaches 69,79,424; recovery rate 85.81 pc.
nCoV: India's tally reaches 69,79,424; recovery rate 85.81 pc.

இந்தியாவில் கரோனா சிகிச்சை பெற்றுக் குணமடைந்தோர் விகிதம் 85.81% ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. 

மத்திய சுகாதாரத் துறை இதுகுறித்து வெளியிட்டுள்ள தகவலில், 

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 82,753 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த நிலையில், இதுவரை மொத்தம் 59,88,822 தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். இதையடுத்து மீட்பு விகிதம் 85,51 சதவீதமாக உள்ளது. 

மேலும், ஒரே நாளில் புதிதாக 73,272 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டில் கரோனா தொற்று பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 69,79,424 ஆக உயர்ந்துள்ளது. 

நேற்றைய நிலவரப்படி 926 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தம் 1,07,416 பேர் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர். 

நோய்த் தொற்று பாதித்த 8,83,185 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். இதையடுத்து சிகிச்சை பெறுவோரின் விகிதம் 12.65 ஆகவும், பலியானோர் விகிதம் 1.54 ஆக உள்ளது. 

நாட்டில் நேற்று ஒரேநாளில் 11,64,017 சோதனைகள் மேற்கொண்ட நிலையில், மொத்தம் 8,57,98,698 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. 

இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலம் கரோனா பாதிப்பில் தொடர்ந்து முதலிடம் வகித்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com