ஆப்கனில் இரண்டு ராணுவ ஹெலிகாப்டர்கள் மோதல்: 15 பேர் பலி 

ஆப்கானிஸ்தானின் தெற்கு ஹெல்மண்ட் மாகாணத்தில் இரண்டு ராணுவ ஹெலிகாப்டர்கள் நடுவானில் மோதிய விபத்தில் 15 பேர் உயிரிழந்ததாக அஞ்சப்படுகிறது.
15 feared dead after two army helicopters collide in Afghanistan
15 feared dead after two army helicopters collide in Afghanistan

காபூல்: ஆப்கானிஸ்தானின் தெற்கு ஹெல்மண்ட் மாகாணத்தில் இரண்டு ராணுவ ஹெலிகாப்டர்கள் நடுவானில் மோதிய விபத்தில் 15 பேர் உயிரிழந்ததாக அஞ்சப்படுகிறது.

மாகாண தலைநகர் லஷ்கர் காவின் தென்மேற்கில் உள்ள நவா-இ-பராக்ஸாய் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு இந்த விபத்து நிகழ்ந்ததாக செய்திகள் தெரிவித்துள்ளது.

சமீப நாள்களாக இரண்டு அண்டை மாகாணங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான தலிபான்களுடன் மோதல் ஏற்பட்ட வருகின்றது. 

இந்த நிலையில், நேற்றிரவு இரண்டு ஹெலிகாப்டர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 15 வீரர்கள் உயிரிழந்திருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. 

கடந்த செப்.24 அன்று வடக்கு பாக்லான் மாகாணத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஆப்கானிஸ்தான் விமானப்படை தாக்குதலில் ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டது. அதில் இரண்டு விமானிகள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com