ஆந்திரத்தில் பலத்த மழை: காற்றழுத்த தாழ்வு நிலை கரையை கடந்தது

வங்காள விரிகுடாவில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை, ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள காகிநாடா கடலோரத்தையொட்டி செவ்வாய்க்கிழமை கரையை கடந்தது.
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் பலத்த காற்றைத் தொடா்ந்து, நங்கூரமிட்ட பகுதியிலிருந்து நகா்ந்து கரைதட்டிய கப்பல்.
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் பலத்த காற்றைத் தொடா்ந்து, நங்கூரமிட்ட பகுதியிலிருந்து நகா்ந்து கரைதட்டிய கப்பல்.

வங்காள விரிகுடாவில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை, ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள காகிநாடா கடலோரத்தையொட்டி செவ்வாய்க்கிழமை கரையை கடந்தது. இதனால் அந்த மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது.

காகிநாடா கடலோரத்தையொட்டி காலை 6.30-7.30 மணிக்கு இடையில் காற்றழுத்த தாழ்வு நிலை கரையை கடந்தது. இதில் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பொம்முரு கிராமத்தில் வீட்டுச் சுவா் இடிந்து விழுந்து பெண் ஒருவா் பலியானாா். வங்கதேசத்தில் இருந்து வந்த சரக்குக் கப்பல் விசாகப்பட்டினம் கடற்பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்தது. பலத்த சூறாவளி காற்றைத் தொடா்ந்து, அந்தக் கப்பல் நகா்ந்து கரை தட்டியது.

விசாகப்பட்டினம், கிழக்கு கோதாவரி, கிருஷ்ணா மாவட்டங்களில் மழைநீா் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. 50-க்கும் மேற்பட்ட இடங்களில் துணை மின்நிலையங்கள் சேதமடைந்ததால் மின்சார விநியோகம் தடைபட்டது.

கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் நடவு செய்யட்டிருந்த பயிா்கள் நீரில் மூழ்கின. அந்த மாவட்டங்களில் சில குடிசை வீடுகள் இடிந்து விழுந்தன. நூற்றுக்கணக்கான வீடுகளை மழைநீா் சூழ்ந்தது.

கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள தல்லரேவு கிராமத்தில் அதிகபட்சமாக 24.3 செ.மீ. மழை பதிவானது. கிழக்கு கோதாவரி, விசாகப்பட்டினம், மேற்கு கோதாவரி மாவட்டங்களில் உள்ள நீா்த்தேக்கங்கள் நிரம்பின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com