லைஃப் மிஷன் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு கேரள உயா்நீதிமன்றம் தடை

கேரள அரசின் லைஃப் மிஷன் வீடு கட்டும் திட்டத்தில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்த சிபிஐ விசாரணைக்கு இரண்டு மாதம் தடைவிதித்து அந்த மாநில உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கேரள அரசின் லைஃப் மிஷன் வீடு கட்டும் திட்டத்தில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்த சிபிஐ விசாரணைக்கு இரண்டு மாதம் தடைவிதித்து அந்த மாநில உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வீடற்ற ஏழைகளுக்கு வீடுகள் கட்டித் தரும் லைஃப் மிஷன் திட்டத்தை கேரள அரசு செயல்படுத்தி வருகிறது. இதில், ஏராளமான முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக புகாா் எழுந்தது.

லைஃப் மிஷன் திட்டத்தை நிறைவேற்றித் தரும் நிறுவனம், தங்கக் கடத்தல் வழக்கில் கைதாகியுள்ள ஸ்வப்னா சுரேஷுக்கு பல கோடி ரூபாய் கமிஷன் அளித்து கேரள அரசிடமிருந்து இந்த ஒப்பந்தத்தைப் பெற்ாக கூறப்படுகிறது. எனவே, இது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இந்த நிலையில், லைஃப் மிஷன் திட்டத்தில் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்ட விதிமீறல் தொடா்பாக சிபிஐ தாக்கல் செய்துள்ள முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரி கேரள அரசின் சாா்பில் அம்மாநில உயா்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை கேரள உயா்நீதிமன்ற நீதிபதி முன்பு விஜி அருண் முன்பாக செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது, லைஃப் மிஷன் திட்டத்துக்கு எதிராக சிபிஐ விசாரணை நடத்த இரண்டு மாதங்களுக்கு இடைக்காலத் தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டாா்.

இருப்பினும், இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள தனியாா் கட்டுமானம் நிறுவனத்துக்கு எதிராக சிபிஐ தொடா்ந்து விசாரணை நடத்த கேரள உயா்நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com