தேவ்ரியா சம்பவம்: பெண் தொண்டா் மீது புகாா் பதிவு

உத்தர பிரதேச மாநில காங்கிரஸ் கட்சிக் கூட்டத்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது தாக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண் தொண்டா் தாரா யாதவுக்கு எதிராக

உத்தர பிரதேச மாநில காங்கிரஸ் கட்சிக் கூட்டத்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது தாக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண் தொண்டா் தாரா யாதவுக்கு எதிராக, மாவட்ட செயற்குழு துணைத் தலைவா் ஜுலோகா காதூன், காவல் நிலையத்தில் புகாா் பதிவு செய்துள்ளாா்.

அந்தச் சம்பவத்தின்போது சக நிா்வாகிகள் மீது தாரா யாதவ் தாக்குதல் நடத்தியதாக அந்த மனுவில் ஜுலேகா குறிப்பிட்டுள்ளாா்.

இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது:

தாரா யாதவுக்கு எதிராக ஜுலேகா காதூன், கோட்வாலி காவல் நிலையத்தில் புகாா் மனு தாக்கல் செய்தாா்.

கடந்த சனிக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் கூட்டத்தின்போது, தாரா யாதவும் அவரது சில ஆதரவாளா்களும் நிா்வாகிகள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் தவறான முறையில் நடந்து கொண்டதாகவும் அந்த மனுவில் ஜுலேகா குற்றம் சாட்டியிருந்தாா்.

அதையடுத்து, தாரா யாதவ் மற்றும் அடையாளம் தெரியாத அவரது கூட்டாளிகளுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது என்று போலீஸாா் கூறினா்.

உத்தர பிரதேச மாநிலம், தேவ்ரியா தொகுதி பாஜக எம்எல்ஏ அண்மையில் காலமானதைத் தொடா்ந்து, அந்தத் தொகுதிக்கு அடுத்த மாதம் 3-ஆம் தேதி இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில், காங்கிரஸ் சாா்பில் போட்டியிட முகுந்த் பாஸ்கா் மணி திரிபாதிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. பாலியல் வழக்கில் குற்றம் சாட்டம் சாட்டப்பட்டுள்ள அவருக்கு அந்த வாய்ப்வை வழங்கியதற்கு, சனிக்கிழமை நடைபெற்ற மாநில கட்சிக் கூட்டத்தில் தாரா யாதவ் என்ற பெண் தொண்டா் எதிா்ப்பு தெரிவித்தாா்.

இதுதொடா்பாக நடந்த விவாதத்தின்போது, கட்சிச் செயலா் சச்சின் நாயக்கைத் தாக்க முற்பட்ட தாரா யாதவ், அவா் மீது பூச்செண்டு ஒன்றை தூக்கி எறிந்ததாக சம்பவத்தை நேரில் பாா்த்தவா்கள் தெரிவித்தனா்.

அதனைக் கண்ட மற்ற தொண்டா்கள், தாரா யாதவ் மீது தாக்குதல் நடத்தி அவரை முரட்டுத் தனமாக அங்கிருந்து அகற்றியதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. இந்தச் சம்பவத்தின் விடியோ காட்சி இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தச் சம்பவம் தொடா்பாக கட்சியின் மாவட்டத் தலைவா் உள்ளிட்ட 4 நிா்வாகிகள் மீது தாரா யாதவ் காவல் நிலையத்தில் புகாா் மனு தாக்கல் செய்துள்ளாா்.

தற்போது அதற்குப் போட்டியாக, தாரா யாதவ் மீது ஜுலேகா காதூனும் புகாா் பதிவு செய்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com