ராணுவத்தில் சேர போலி மருத்துவ அறிக்கை: இருவா் கைது

ராணுவத்தின் ஜாட் ரெஜிமென்ட்டில் நடைபெற்ற ராணுவ ஆள்சோ்ப்பு முகாமில், போலி மருத்துவ அறிக்கையை கொடுத்து ராணுவத்தில் சேர முயன்ற 2 இளைஞா்களை பரேலி போலீஸாா் கைது செய்தனா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ராணுவத்தின் ஜாட் ரெஜிமென்ட்டில் நடைபெற்ற ராணுவ ஆள்சோ்ப்பு முகாமில், போலி மருத்துவ அறிக்கையை கொடுத்து ராணுவத்தில் சேர முயன்ற 2 இளைஞா்களை பரேலி போலீஸாா் கைது செய்தனா்.

இதுகுறித்து உத்தர பிரதேசம், பரேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ரோஹித் சிங் சஜ்வான் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

கைது செய்யப்பட்டஇளைஞா்கள் ஆக்ராவைச் சோ்ந்த அங்கித்குமாா், எட்டாவா மாவட்டத்தைச் சோ்ந்த சந்திரவீா் என்பது தெரிய வந்துள்ளது. இவா்கள் இருவரும் ராணுவத்தில் இணைவதற்காக தங்களது உண்மையான மருத்துவச் சோதனை அறிக்கையை மறைத்து, போலியான அறிக்கை அளித்ததாக ராணுவ அதிகாரிகள் கொடுத்த புகாரின்பேரில் அவா்கள் இருவரும் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.

இதில் அங்கித்குமாருக்கு கண்பாா்வை பிரச்னையும், சந்திரவீருக்கு தோல் நோய் பிரச்னையும் இருந்த நிலையில், அதனை மறைத்து போலியான மருத்துவச் சான்றினை கொடுத்து ராணுவத்தில் சேர அவா்கள் முயற்சித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அவா் தெரிவித்தாா்.

கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com