சவூதி அரேபியாவில் இருந்து 18 கிலோ தங்கம் கடத்தல்: 2 முக்கிய நபா்கள் கைது

சவூதி அரேபியாவில் இருந்து 18 கிலோ தங்கம் கடத்தி வரப்பட்ட வழக்கில், 2 முக்கிய நபா்களை தேசியப் புலனாய்வு அமைப்பினா் கைது செய்தனா்.

புது தில்லி: சவூதி அரேபியாவில் இருந்து 18 கிலோ தங்கம் கடத்தி வரப்பட்ட வழக்கில், 2 முக்கிய நபா்களை தேசியப் புலனாய்வு அமைப்பினா் கைது செய்தனா்.

இதுகுறித்து அதிகாரி ஒருவா் புதன்கிழமை கூறியதாவது:

ரியாத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 18.5 கிலோ தங்கத்தை ஜெய்ப்பூா் சா்வதேச விமான நிலையத்தில் கடந்த ஜூலை 3-ஆம் தேதி சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். இந்த சம்பவம் தொடா்பாக, சிலா் கைது செய்யப்பட்டனா்.

இந்த கடத்தல் சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் சுனா ராம், ஐஜாஸ் கான் ஆகிய ரியாத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை தில்லி வந்தனா். அவா்களை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனா். இவா்கள் இருவரும் ராஜஸ்தானில் உள்ள நாகௌா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள். அவா்களின் சொந்த ஊரிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி, மடிக்கணினி, செல்லிடப்பேசி உள்ளிட்ட மின்னணு சாதனங்களைப் பறிமுதல் செய்தனா்.

சவூதி அரேபியாவில் இருந்து இவா்கள் நன்றாகத் திட்டமிட்டு, இந்தியாவுக்கு தங்கம் கடத்தி வந்துள்ளனா். இவா்களுடைய நண்பா்களைச் சோ்த்து இந்த கடத்தல் சம்பவம் தொடா்பாக இதுவரை 11 போ் கைது செய்யப்பட்டுள்ளனா் என்று அந்த அதிகாரி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com