பிகார் தேர்தலில் 30% வேட்பாளர்களுக்கு குற்றப்பின்னணி

நடைபெற உள்ள பிகார் தேர்தலில் முதற்கட்ட வேட்பாளர்களின் பட்டியலில் 30% பேர் கிரிமினல் குற்றப்பின்னணி உள்ளவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

நடைபெற உள்ள பிகார் தேர்தலில் முதற்கட்ட வேட்பாளர்களின் பட்டியலில் 30% பேர் கிரிமினல் குற்றப்பின்னணி உள்ளவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

பிகாரில் அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் நவம்பர் 7 என 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸும், ஜேடியு கூட்டணியில் பாஜகவும் போட்டியிடுகின்றன.

இந்நிலையில் முதல்கட்ட தேர்தலில் போட்டியிடும் 1,066 வேட்பாளர்களில் 319 பேர் குற்றப் பின்னணி கொண்டவர்கள் என்பது தெரியவந்துள்ளது. வேட்பாளர்கள் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தின் அடிப்படையில் இந்தத் தகவலை மாநில தேர்தல் ஆணையம் உறுதி செய்துள்ளது.

குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளர்களைக் கொண்டதில் கயா மாவட்டம் முன்னணியில் உள்ளது. 10 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட இந்த மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களில் 49 வேட்பாளர்கள் கிரிமினல் குற்றப்பின்னணி கொண்டவர்கள். அதனைத் தொடர்ந்து போஜ்பூரில் 39 வேட்பாளர்களும், ரோஹ்தாஸில் 37 வேட்பாளர்களும், பக்ஸரில் 23 வேட்பாளர்களும் குற்றப்பின்னணி கொண்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆர்) மற்றும் பீகார் தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் சமீபத்திய ஆய்வில், தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையில் 136 (57%) சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com