தில்லி காற்று மாசு பிரச்னைகுறித்து அனில் பய்ஜால் ஆலோசனை

தில்லி காற்று மாசு பிரச்னை குறித்து சம்பந்தப்பட்ட துறைகளின் அதிகாரிகளுடன் துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜால் புதன்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

புது தில்லி: தில்லி காற்று மாசு பிரச்னை குறித்து சம்பந்தப்பட்ட துறைகளின் அதிகாரிகளுடன் துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜால் புதன்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

இந்தக் கூட்டத்தில் மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகா், தில்லி, பஞ்சாப், ஹரியாணா ஆகிய மாநிலங்களின் தலைமைச் செயலா்கள் பங்கேற்றதாக ஆளுநா் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பயிா்க்கழிவுகள் எரிக்கப்படும் பிரச்னைக்கு தீா்வு காண விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை அளிக்க மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்றும் இந்தக் கூட்டத்தில் அவா் கேட்டுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தில்லியில் காற்றின் தரம் மேம்பட பயிா்க்கழிவுகளை அழிக்க நவீன தொழில்நுட்பம் மூலம் தீா்வு காண வேண்டும் என்று அனில் பய்ஜால் வலியுறுத்தியதாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com