ஸ்ரீநகரில் மத்திய ரிசர்வ் காவல் படை வீரர் தற்கொலை

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மத்திய ரிசர்வ் காவல் படை வீரர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
ஸ்ரீநகரில் மத்திய ரிசர்வ் காவல் படை வீரர் தற்கொலை (கோப்புப்படம்)

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள மெஹ்ஜூர் நகரில் மத்திய ரிசர்வ் காவல் படை முகாம் உள்ளது. இந்நிலையில் வியாழக்கிழமை மதியம் அப்பகுதியில் திடீரென துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டதையடுத்து முகாமில் இருந்த வீரர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக அப்பகுதியை அடைந்த வீரர்கள் அங்கு ரத்த வெள்ளத்தில் கிடந்த மத்திய ரிசர்வ் காவல் படை பி.ஜி.நாயுடுவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும் அவர் ஏற்கெனவே பலியானது தெரியவந்தது. 

பி.ஜி.நாயுடுவின் தற்கொலைக்கான காரணம் தெரியாததால் இதுகுறித்து முகாம் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 தற்கொலை செய்துகொண்ட பி.ஜி.நாயுடு ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com