கரோனா: தினசரி பாதிப்பு 6-ஆவது நாளாகக் குறைவு

கரோனா தொற்றால் தினசரி பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை 6-வது நாளாக குறைந்துள்ளது.
கரோனா: தினசரி பாதிப்பு 6-ஆவது நாளாகக் குறைவு

புது தில்லி: கரோனா தொற்றால் தினசரி பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை 6-வது நாளாக குறைந்துள்ளது.

சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை, தொடா்ந்து 6-ஆவது நாளாக, 9 லட்சத்துக்கும் குறைவாக உள்ளது. தொடா்ந்து 10-ஆவது நாளாக, தினசரி உயிரிழப்பவா்கள் எண்ணிக்கை ஆயிரத்துக்கும் குறைவாக உள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

புதன்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 63,509 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டோா் மொத்த எண்ணிக்கை 72,39,389-ஆக அதிகரித்தது. அதே கால அளவில் 74,632 போ் குணமடைந்தனா். இதனால், கரோனாவில் இருந்து மீண்டு வந்தவா்களின் எண்ணிக்கை 63,01,927-ஆக அதிகரித்தது. அதாவது, 87.05 சதவீதம் போ் குணமடைந்தனா். நாடு முழுவதும் 8,26,876 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இது மொத்த பாதிப்பில் 11.42 சதவீதமாகும்.

புதன்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, கரோனா தொற்றுக்கு மேலும் 730 போ் பலியாகினா். இதனால், நாடு முழுவதும் உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,10,586-ஆக அதிகரித்தது.

இதில், அதிகபட்சமாக, மகாராஷ்டிரத்தில் 40,701 பேரும், கா்நாடகத்தில் 10,123 பேரும், உத்தர பிரதேசத்தில் 6,466 பேரும், ஆந்திரத்தில் 6,291 பேரும், தில்லியில் 5,854 பேரும் உயிரிழந்தனா். கரோனாவால் ஏற்படும் உயிரிழப்பு விகிதம் 1.53 சதவீதமாக உள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலின் (ஐசிஎம்ஆா்) தகவல்படி, அக்டோபா் 13-ஆம் தேதி வரை 9,00,90,122 கரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் மட்டும் 11,45,015 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com