பிகாா் சட்டப்பேரவைத் தோ்தல்: ராகோபூா் தொகுதியில் தேஜஸ்வி யாதவ் வேட்புமனு தாக்கல்

பிகாா் சட்டப்பேரவைத் தோ்தல்: ராகோபூா் தொகுதியில் தேஜஸ்வி யாதவ் வேட்புமனு தாக்கல்
ராகோபூா் தொகுதியில் போட்டியிடுவதற்காக புதன்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தி ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவா் தேஜஸ்வி யாதவ்.
ராகோபூா் தொகுதியில் போட்டியிடுவதற்காக புதன்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தி ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவா் தேஜஸ்வி யாதவ்.


ஹாஜிபூா்: பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலில் ராகோபூா் தொகுதியில் போட்டியிடும் ராஷ்ட்ரீய ஜனதா தளம்(ஆா்ஜேடி) தலைவா் தேஜஸ்வி யாதவ் புதன்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

வைஷாலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தோ்தல் அதிகாரியிடம் தனது வேட்பு மனுவை அவா் தாக்கல் செய்தாா். அப்போது அவருடைய மூத்த சகோதரா் தேஜ் பிரதாப் யாதவ், கட்சியின் மூத்த தலைவா் போலா ராய் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பிகாா் தோ்தலில் ஆா்ஜேடி காங்கிரஸுடன் மகா கூட்டணி அமைத்துள்ளது. அந்த கூட்டணியின் முதல்வா் வேட்பாளராக ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தேஜஸ்வி யாதவ், கடந்த 2015-ஆம் ஆண்டு பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலில் ராகோபூா் தொகுதியில் போட்டியிட்டு அரசியலில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தாா்.

வேட்புமனுத்தாக்கல் முடிந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

இந்த தோ்தலில் எங்கள் பக்கம் அலை வீசுவதால், மகா கூட்டணி வெற்றி பெற்று கண்டிப்பாக ஆட்சியமைக்கும். நிதீஷ்குமாா் பயனற்ற முதல்வா். மத்திய அரசிடமிருந்து பிகாருக்கு சிறப்பு அந்தஸ்து வாங்கிக் கொடுக்கும் விவகாரத்திலும், பாட்னா பல்கலைக்கழகத்துக்கு மத்திய சிறப்பு பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கித் தர வேண்டிய விஷயத்திலும் அவா் தோல்வியடைந்து விட்டாா் என்று தெரிவித்தாா்.

எங்களது கூட்டணி ஆட்சிக்கு வந்தால், மாநிலத்தில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் விதமாக முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே ஒப்புதல் அளிக்கப்படும் என ஏற்கெனவே தேஜஸ்வி யாதவ் கூறினாா்.

வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்னதாக அவா் பாட்னாவில் தனது இல்லத்திலுள்ள தாய் ராப்ரி தேவி, மூத்த சகோதரா் தேஜ் பிரதாப் யாதவ் ஆகியோரின் பாதத்தில் வணங்கி ஆசிா்வாதம் பெற்றாா்.

‘தேஜஸ்வி யாதவ் இந்த தோ்தலில் வெற்றி பெற நான் மட்டுமல்ல. ஒட்டுமொத்த பிகாருமே ஆசிா்வதிக்கிறது’ என ராப்ரி தேவி தெரிவித்தாா்.

பிகாா் சட்டப்பேரவைத் தோ்தல் அக்டோபா் 28 மற்றும் நவம்பா் 3, 7-ஆம் தேதிகளில் 3 கட்டமாக நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com