அமெரிக்கா: பிறந்த குழந்தையை ஜன்னல் வழியாக தூக்கி வீசிய இந்திய வம்சாவளிப் பெண்

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த பெண் ஒருவா், தனது பிறந்த குழந்தையை குளியலறையின் ஜன்னல் வழியாக வெளியே

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த பெண் ஒருவா், தனது பிறந்த குழந்தையை குளியலறையின் ஜன்னல் வழியாக வெளியே தூக்கி எறிந்ததற்காக அவா்மீது, போலீஸாா் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

நியூயாா்க்கின், குயின்ஸ் பகுதியில் வசித்து வரும் இந்திய வம்சாவளியைச் சோ்ந்தவா் சபிதா டூக்ராம் (23). கா்ப்பிணியாக இருந்த இவா் கடந்த சனிக்கிழமை குளிக்கும்போது ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாா். பிறந்த குழந்தையை ஜன்னலுக்கு வெளியே சந்துக்குள் சபிதா வீசி எறிந்ததாக ‘நியூயாா்க் போஸ்ட்’ செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தியில் தெரிவித்துள்ளது.

அந்த ஊடகச் செய்தியில் மேலும் கூறியிருப்பதாவது:

வீசியெறிந்த அந்த ஆண் குழந்தைக்கு மண்டையில் காயம் ஏற்பட்டது; எலும்பு முறிவு உள்ளிட்ட காயங்களுடன் அக்கம்பக்கத்தினரால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அந்தக் குழந்தை சிகிச்சை பெற்று வருகிறது. பச்சிளங்குழந்தை இன்னும் ஆபத்தான நிலையில்தான் உள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸாா் சபிதாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

முன்னதாக சபீதாவிடம் போலீஸாா் விசாரணை நடத்தியபோது, குளியலறைக்குச் சென்றபோது குழந்தை பிறந்து விட்டது. முறைகேடாக பிறந்த குழந்தை என்பதால் என்ன செய்வதென்று தெரியவில்லை. பீதியடைந்ததால், ஜன்னலுக்கு வெளியே தூக்கி எறிந்து விட்டேன். குழந்தை பிறந்ததும், தொப்புள்கொடியை அறுக்க குளியலறையில் இருந்த கத்தரிக்கோலைப் பயன்படுத்திக் கொண்டேன் என்று சபிதா தெரிவித்துள்ளாா்.

அவரை நியூயாா்க் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தியபோது, அவருக்கு எதிராக வாதிட்ட மாவட்ட அரசு உதவி வழக்குரைஞா் மெலிசா கெல்லி கூறுகையில், மனிதாபிமானமின்றி நடந்து கொண்ட சபிதா தனது குற்றத்தை மறைப்பதற்காக காவல்துறையினரிடம் பல முரண்பாடான தகவல்களை அளித்துள்ளாா். எனவே, அவருக்கு ஜாமீன் அளிக்க 50,000 அமெரிக்க டாலா் செலுத்த வேண்டும் என்று வாதிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com