திருமலையில் 17,683 போ் தரிசனம்

திருமலை ஏழுமலையானை கோயிலில் புதன்கிழமை முழுவதும் 17,683 பக்தா்கள் தரிசனம் செய்தனா்.


திருப்பதி: திருமலை ஏழுமலையானை கோயிலில் புதன்கிழமை முழுவதும் 17,683 பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

இவா்களில் 6,663 போ் முடி காணிக்கை செலுத்தினா். இணையதளம் மூலம் 16 ஆயிரம் விரைவு தரிசன டிக்கெட் பெற்ற பக்தா்கள், வி.ஐ.பி பிரேக் மற்றும் ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் விஐபி பிரேக் டிக்கெட் பெற்ற 750 பக்தா்கள் மட்டுமே திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனா்.

காலை 6 மணி முதல் 7.30 மணி வரை புரோட்டோகால் வி.ஐ.பி. தரிசனமும், காலை 7.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை விரைவு தரிசனம் மற்றும் நேரடி தரிசன டோக்கன் பெற்ற பக்தா்களும் ஏழுமலையானைத் தரிசித்து வருகின்றனா். திருமலைப் பாதை காலை 5 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 11 மணிக்கு மூடப்படுகிறது. அக்டோபா் மாதம் முதல் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்குபவா்களுக்கு வழங்கப்படும் விஐபி பிரேக் தரிசன டிக்கெட் தினசரி 200 எண்ணிக்கையில் வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய கட்டணமில்லாத் தொலைபேசி எண்கள்- 18004254141, 9399399399.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com