உ.பி.யில் கரோனா சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 35,263 ஆகக் குறைவு

உத்தரப் பிரதேசத்தில் புதிதாக 2,610 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 
2,610 fresh coronavirus cases in UP, active caseload down to 35,263
2,610 fresh coronavirus cases in UP, active caseload down to 35,263

2,610 fresh coronavirus cases in UP, active caseload down to 35,263 .

உத்தரப் பிரதேசத்தில் புதிதாக 2,610 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்துள்ளது. அந்தவகையில் உத்தரப் பிரதேசத்தில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வந்தது.

எனினும் கடந்த மாதத்தை ஒப்பிடும்போது இம்மாதம் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த 24 மணிநேரத்தில் 2,610 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 46 பேர் உயிரிழந்தனர். 

கரோனாவால் பாதிக்கப்பட்டு 35,263 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 4,08,083 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.  இதனால் குணமடைவோர் விகிதம் 90.69 சதவிகிதமாக உள்ளது.

கரோனாவால் இதுவரை 6,589 பேர் உயிரிழந்தனர். இதுவரை ஒடிசாவில் மொத்தம் 4,49,935 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 1.26 கோடி கரோனா பரிசோதனைகள் மேற்கொண்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com