குளிர்சாதனப் பெட்டி இறக்குமதிக்கு தடை விதித்தது மத்திய அரசு!

உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் பொருட்டு வெளிநாடுகளில் இருந்து குளிர்சாதனப் பெட்டி இறக்குமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

வெளிநாடுகளில் இருந்து குளிர்சாதனப் பெட்டி இறக்குமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. 

உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் பொருட்டு, இந்தியாவில் கிடைக்கும் சில பொருள்களின் இறக்குமதிக்கு மத்திய அரசு தடை விதித்து வருகிறது. 

முன்னதாக கார்கள், பேருந்துகள், லாரிகள், பைக்குகளில் பயன்படுத்தப்படும் டயர்கள், டிவி உள்ளிட்ட பொருள்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ள நிலையில், தற்போது குளிர்சாதனப்பெட்டிகளை இறக்குமதி செய்வதற்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. 

இதன்படி, ஏர் கண்டிஷனர் என்றும் குளிர்சாதனப்பெட்டிகளை இறக்குமதி செய்ய  தடை விதித்து வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் நேற்று அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது.

ஏர் கண்டிஷனர் மற்றும் அதில் பயன்படுத்தப்படும் கம்ப்ரஸர் உள்ளிட்ட பொருள்கள் சீனா மற்றும் தாய்லாந்திலிருந்து சுமார் 90% இறக்குமதி செய்யப்படுகிறது. இந்தியாவில் தற்போது ஏசி இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் இந்த இரு நாட்டு வர்த்தகமும் பாதிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com