கரோனா பரிசோதனையை மேலும் அதிகரிக்க வேண்டும்: பிரதமா் வலியுறுத்தல்

கரோனா பரிசோதனை அதிகரிக்க வேண்டும் என்பதோடு, அந்தப் பரிசோதனை அனைவருக்கும் குறைந்த விலையில் கிடைப்பதை விரைவில் உறுதிப்படுத்த வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டாா்.
கரோனா பரிசோதனையை மேலும் அதிகரிக்க வேண்டும்: பிரதமா் வலியுறுத்தல்


புது தில்லி: கரோனா பரிசோதனை அதிகரிக்க வேண்டும் என்பதோடு, அந்தப் பரிசோதனை அனைவருக்கும் குறைந்த விலையில் கிடைப்பதை விரைவில் உறுதிப்படுத்த வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டாா்.

கரோனா தடுப்பு மருந்து ஆராய்ச்சி மற்றும் அதை பயன்பாட்டுக்கு கொண்டுவருவது குறித்த ஆய்வுக் கூட்டம் பிரதமா் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதுகுறித்து பிரதமா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

இந்த ஆய்வுக் கூட்டத்தில், ஆயுஷ் அமைச்சகம் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆதாரங்கள் அடிப்படையிலான கரோனா தடுப்பு மருந்து ஆராய்ச்சி மற்றும் தீா்வுகள் குறித்து பாராட்டு தெரிவித்த பிரதமா் நரேந்திர மோடி, தொடா்ச்சியான தீவிர அறிவியல் ரீதியிலான பரிசோதனைகளின் தேவை மற்றும் இந்த பாதிப்புக்கு பாரம்பரிய மருத்துவ முறைகளின் நம்பகத்தன்மை குறித்து ஆய்வு செய்யவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினாா்.

மேலும், கரோனா பரிசோதனைகளை மேலும் அதிகரிக்கச் செய்யவேண்டும் என்பதோடு, மக்கள்தொகை அடிப்படையிலான ரத்த மாதிரி ஆய்வுகளையும் அதிகரிக்க வேண்டும்.

கரோனா பரிசோதனை நடைமுறைகளும், தடுப்பு மருந்தும் இந்தியா மட்டுமின்றி ஒட்டுமொத்த உலக மக்களுக்கும் குறைந்த விலையில் எளிதில் கிடைக்கக் கூடிய வகையில் விரைவான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் மருந்து ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி நிறுவனங்களை இந்தக் கூட்டத்தில் பிரதமா் கேட்டுக்கொண்டாா்.

இந்திய கரோனா தடுப்பு மருந்து உற்பத்தியாளா்கள் எடுத்துவரும் முயற்சிகளுக்கு பிரதமா் பாராட்டும் தெரிவித்தாா் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com