பொதுசுகாதாரத்தில் கவனம் செலுத்த இந்தியாவிற்கு ஐ.எம்.எஃப். வலியுறுத்தல்

கரோனா தொற்று பாதிப்பு மத்தியில் பொதுசுகாதாரத்தில் இந்தியா கவனம் செலுத்த வேண்டும் என பன்னாட்டு செலாவணி நிதியம் வலியுறுத்தியுள்ளது.
பன்னாட்டு செலாவணி நிதியம்
பன்னாட்டு செலாவணி நிதியம்

கரோனா தொற்று பாதிப்பு மத்தியில் பொதுசுகாதாரத்தில் இந்தியா கவனம் செலுத்த வேண்டும் என பன்னாட்டு செலாவணி நிதியம் வலியுறுத்தியுள்ளது.

பன்னாட்டு செலாவணி நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்திரக் கூட்டம் இணையவழியில் புதன்கிழமை நடைபெற்றது. அதில் கரோனா தொற்று காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் பேசிய ஐ.எம்.எஃப். நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா,  “கரோனா நெருக்கடி காலத்தில் இந்தியா பொதுசுகாதாரத்தில் முன்னுரிமை செலுத்த வேண்டும்.” எனத் தெரிவித்தார். "இந்தியாவில் ஒரு லட்சம் பேர் இறந்துள்ளனர். எனவே, மக்களைப் பாதுகாப்பதிலும், மக்களின் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்துவது முன்னுரிமையாக உள்ளது.” என அவர் குறிப்பிட்டார்.

மேலும் சுகாதார நெருக்கடியிலிருந்து  வெளியேறும் வரை நீடித்த சிரமங்களை எதிர்கொள்வோம் என தெரிவித்த ஜார்ஜீவா, பன்னாட்டு செலாவணி நிதியம் வெளியிட்ட அறிக்கையில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2020 ஆம் ஆண்டில் 10.3 சதவிகிதம் சுருங்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருந்ததைக் குறிப்பிட்டுப் பேசினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com