இந்தியர்களின் சராசரி ஆயுள்காலம் அதிகரிப்பு: ஆய்வில் தகவல்

கடந்த 20 ஆண்டுகளில் இந்தியர்களின் சராசரி ஆயுள்காலம் 70.8 ஆண்டுகளாக உயர்ந்துள்ளதாக லான்செட் இதழ் வெளியிட்டுள்ள ஆய்வில் தெரியவந்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கடந்த 30 ஆண்டுகளில் இந்தியர்களின் சராசரி ஆயுள்காலம் 70.8 ஆண்டுகளாக உயர்ந்துள்ளதாக லான்செட் இதழ் வெளியிட்டுள்ள ஆய்வில் தெரியவந்துள்ளது.

லான்செட் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில், இந்திய மக்களின் சராசரி ஆயுள்காலம் 1990ஆம் ஆண்டில் 59.6 ஆண்டுகளாக இருந்த நிலையில் 2019ஆம் ஆண்டில் 70.8 ஆண்டுகளாக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களைப் பொருத்தவரையில் மாறுபட்ட நிலைமைகள் நிலவுவதாக தெரிவித்துள்ள லான்செட், இது கேரளாவில் 77.3 ஆண்டுகளாகவும், உத்தரபிரதேசத்தில் 66.9 ஆண்டுகளாகவும் உயர்ந்துள்ளது கூறியுள்ளது.

இந்தியாவில் 2019 நிலவரப்படி மொத்த நோய் பாதிப்புகளில் 58%  தொற்று அற்ற நோய்களால் ஏற்படுகிறது. இது 1990 ல் 29% ஆக இருந்தது.

"இந்தியாவில் தாய்மார்களின் இறப்பு மிக அதிகமாக இருந்த நிலையில் இப்போது அது குறைந்து வருகிறது. எனினும் இருதய நோய்கள் மற்றும் புற்றுநோய்களின் விகிதங்கள் அதிகரித்து வருகின்றன.” என்று சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டு நிறுவனத்தின் (IHME) உலகளாவிய சுகாதார பேராசிரியர் திரு.மொக்தாத் தெரிவித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டில், இந்தியாவில் இறப்புக்கான முதல் ஐந்து ஆபத்து காரணிகளாக காற்று மாசுபாடு (1.67 மில்லியன் இறப்புகளுக்கு பங்களிப்பு), உயர் இரத்த அழுத்தம் (1.47 மில்லியன்), புகையிலை பயன்பாடு (1.23 மில்லியன்), மோசமான உணவு (1.18 மில்லியன்) , மற்றும் சர்க்கரை பாதிப்பு (1.12 மில்லியன்) ஆகியவை பங்காற்றுவதாக ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சுகாதார முன்னேற்றத்தில் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியின் பெரும் தாக்கத்தை கருத்தில் கொண்டு, பொருளாதார வளர்ச்சியைத் தூண்டும் கொள்கைகள் அதிகப்படுத்துவது, பள்ளிக்கல்வி அணுகலை விரிவுபடுத்துதல் மற்றும் பெண்களின் நிலையை மேம்படுத்துதல் ஆகியவைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்." என்று அந்த ஆய்வில் வலுயுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com