பிகார் அமைச்சர் கபில் தேவ் காமத் கரோனாவுக்கு பலி 

ஐக்கிய ஜனதா தளத்தின் அமைச்சரான கபில் தேவ் காமத் கரோனா பாதித்து சிகிச்சை பலனின்றி இன்று பிகார் மருத்துவமனையில் உயிரிழந்தார். 
JD-U Minister Kapil Dev Kamat succumbs to corona
JD-U Minister Kapil Dev Kamat succumbs to corona

பாட்னா: ஐக்கிய ஜனதா தளத்தின் அமைச்சரான கபில் தேவ் காமத் கரோனா பாதித்து சிகிச்சை பலனின்றி இன்று பிகார் மருத்துவமனையில் உயிரிழந்தார். 

அவருக்கு வயது 69. கடந்த சில நாள்களுக்கு முன்பு சிறுநீரக தொற்று பாதிக்கப்பட்ட பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு டயாலிசிஸ் மேற்கொண்டு வந்தார். 

இந்நிலையில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவரின் உடல்நிலை மேலும் மோசமடைந்தது. இதன்பின்னர் தொடர்ந்து செயற்கை சுவாச கருவியின் மூலம் சுவாசித்து வந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று மருத்துவமனையில் அவரின் உயிர் பிரிந்தது. 

ஜே.டி.யுவில் சேருவதற்கு முன்பு, அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்தார். 2015இல் பாபுபரி தொகுதியிலிருந்து ஜே.டி.யு.வில் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பிகாரில் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்தில் கரோனா காரணமாக இறந்த இரண்டாவது அமைச்சர் காமத் ஆவார். 

முன்னதாக, வினோத் சிங், குருகிராமின் மேதாந்தா மருத்துவமனையில் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com