'தில்லியில் புதிய கல்லூரிகளை நிறுவ வேண்டும்'

தில்லியில் புதிய கல்லூரிகளை திறப்பது குறித்து மத்திய கல்வித்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளதாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால்  (கோப்புப்படம்)
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் (கோப்புப்படம்)

தில்லியில் புதிய கல்லூரிகளை திறப்பது குறித்து மத்திய கல்வித்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளதாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய முதல்வர் அரவிந்த் கேஜரிவால், ''தில்லியில் அதிக அளவிலான கட்-ஆப் மதிப்பெண்கள் இருப்பதற்கு காரணம் என்ன?. குறைந்த அளவிலான கல்லூரிகள் இருப்பதன் காரணமாகவே அதிக அளவிலான கட்- ஆப் மதிப்பெண்கள் உடையவகளுக்கு மட்டும் சேர்க்கை நடைபெறுகிறது.

மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டும். 
தில்லி பல்கலைக்கழகத்தின் கீழ் புதிய கல்லூரிகளை இணைக்க வேண்டும் என்று கூறினார்.  

புதிய கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் திறக்கப்படுவதற்காக சட்டத்தில் திருத்தம் செய்யக் கோரி கல்வி அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளேன்'' என்று முதல்வர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com