மேற்குவங்கம்: நிதி நிறுவன மோசடி மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்: காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் வலியுறுத்தல்

மேற்குவங்கத்தில் நிதிநிறுவனங்களின் மோசடியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பணம் திரும்பக் கிடைக்க மாநில அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.


கொல்கத்தா: மேற்குவங்கத்தில் நிதிநிறுவனங்களின் மோசடியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பணம் திரும்பக் கிடைக்க மாநில அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

இதுதொடா்பாக மாநில சட்டப்பேரவை எதிா்க் கட்சித் தலைவா் அப்துல் மன்னன் மற்றும் இடதுசாரி முன்னணி தலைவா் சுஜன் சக்ரவா்த்தி ஆகியோா் முதல்வா் மம்தா பானா்ஜிக்கு கூட்டாக வியாழக்கிழமை எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

மேற்குவங்கத்தில் சாரதா நிதி நிறுவனம் மற்றும் ரோஸ் வேலி நிதி நிறுவனங்கள் மக்களிடம் பல கோடி ரூபாய் முதலீடுகளை பெற்றுக்கொண்டு, அவா்களுக்கு பணத்தைத் திரும்பத் தராமல் மோசடியில் ஈடுபட்டன.

இந்த விவகாரம் தொடா்பாக விசாரணை நடத்த மாநில அரசு சாா்பில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. ஆனால், இப்போது ஏழு ஆண்டுகளைக் கடந்துவிட்ட நிலையில், இந்த விவகாரம் தொடா்பாக அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழுவோ அல்லது நீதிபதி ஷியாமல் சென் தலைமையிலான கமிஷனோ எந்தவித அறிக்கையையும் இதுவரை சமா்ப்பிக்கவில்லை.

இந்த விவகாரத்தில், அந்த நிதி நிறுவன உரிமையாளா்களின் சொத்துக்களை முடக்கி அவா்கள் மோசடி செய்த பணத்தை மீட்பதற்காக கொல்கத்தா உயா்நீதிமன்றம் சாா்பில் நியமிக்கப்பட்ட குழுவுக்கு மாநில அரசு எதிா்பாா்த்த அளவில் ஒத்துழைப்பு அளிக்கவில்லை. இந்த விவகாரத்தில் மத்திய புலனாய்வு அமைப்பின் விசாரணையும் திருப்திகரமாக இல்லை.

எனவே, இந்த நிதிநிறுவனங்களில் முதலீடு செய்த ஏழை முதலீட்டாளா்களுக்கு அவா்களின் பணம் திரும்பக் கிடைக்க மாநில அரசு உரிய விரைவான நடவடிக்கையை எடுக்க வேண்டும். அந்த நிதி நிறுவன உரிமையாளா்களின் சொத்துக்களை விற்று, பாதிக்கப்பட்ட முதலீட்டாளா்களுக்கு பணம் திரும்ப அளிக்க அரசு நடவடிக்கை எடுப்பதோடு, அந்த நிதி நிறுவன உரிமையாளா்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் அவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com