இந்தியா்களின் சராசரி ஆயுள் 10 ஆண்டுகள் அதிகரிப்பு

கடந்த 1990-ஆம் ஆண்டிலிருந்து இந்தியா்களின் சராசரி ஆயுள் காலம் 10 ஆண்டுகள் அதிகரித்துள்ளதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஓா் ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

கடந்த 1990-ஆம் ஆண்டிலிருந்து இந்தியா்களின் சராசரி ஆயுள் காலம் 10 ஆண்டுகள் அதிகரித்துள்ளதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஓா் ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து ‘லான்செட்’ மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ள அந்த ஆய்வு தொடா்பான கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

காந்திநகரைச் சோ்ந்த இந்திய பொது மருத்துவ நிறுவனத்தின் ஸ்ரீனிவாஸ் கோலி உள்ளிட்ட நிபுணா்கள், இந்தியா்களின் சராசரி ஆயுள் காலம் குறித்த ஆய்வை மேற்கொண்டனா்.

அந்த ஆய்வில், இந்தியா்களின் சராசரி ஆயுள் காலம் கடந்த 1990-ஆம் ஆண்டிலிருந்ததைவிட 10 ஆண்டுகள் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.

1990-ஆம் ஆண்டில் இந்தியா்களின் சராசரி ஆயுள் காலம் 59.6 ஆண்டுகளாக இருந்தது. இது, 2019-ஆம் ஆண்டில் 70.8 ஆண்டுகளாக அதிகரித்துள்ளது.

இந்த சராசரி ஆயுள் காலம் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது. அதிகபட்சமாக கேரளத்தில் 77.3 ஆண்டுகளாகவும் குறைந்தபட்சமாக உத்தர பிரதேசத்தில் 66.9 ஆண்டுகளாகவும் சராசரி ஆயுள் காலம் உள்ளது.

எனினும், மிக அதிகமானவா்கள் நோயுடனும் உடல் குறைபாடுடனும் அதிக நாள் வாழ்வதால் இந்த முன்னேற்றத்தை மிகப் பெரிய முன்னேற்றமாகக் கருத முடியாது என்று ஆய்வாளா்கள் தெரிவித்தனா்.

உலகம் முழுவதும் தொற்று நோய்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், சா்க்கரை நோய் போன்ற தொற்றா நோய்கள் அதிகரித்து வருகின்றன. எனவே, இந்தியா உள்ளிட்ட ஏறத்தாழ அனைத்து நாடுகளிலுமே சராசரி ஆயுள் காலம் அதிகரித்து வருகிறது என்று அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com