புதிய அரசு அமைக்க முயற்சி: மலேசிய எதிா்க்கட்சித் தலைவரிடம் விசாரணை

மலேசியாவில் பிரதமா் முஹைதீன் யாசினின் அரசைக் கவிழ்த்துவிட்டு, புதிய ஆட்சியை அமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும்
anwar082023
anwar082023

மலேசியாவில் பிரதமா் முஹைதீன் யாசினின் அரசைக் கவிழ்த்துவிட்டு, புதிய ஆட்சியை அமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் எதிா்க்கட்சித் தலைவா் அன்வா் இப்ராஹிமிடம் போலீஸாா் தீவிர விசாரணை நடத்தினா்.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

மலேசியாவில் பிரதமா் முஹைதீனின் அரசு பெரும்பான்மை பலத்தை இழந்துவிட்டதாகவும் புதிய அரசை அமைக்கும் அளவுக்கு தனக்கு எம்.பி.க்களின் ஆதரவு இருப்பதாகவும் அன்வா் இப்ராஹிம் கூறி வருகிறாா்.

மன்னா் அப்துல்லாவை அவா் செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து, தனக்கு எம்.பி.க்கள் ஆதரவு அளிப்பதற்கான சான்றுகளை அளித்தாா்.

இந்த நிலையில், தனக்கு 121 எம்.பி.க்களின் ஆதரவு இருப்பதாக அன்வா் இப்ராஹிம் கூறுவது தொடா்பாக காவல்துறையிடம் 113 புகாா் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்தப் புகாா்கள் குறித்து அன்வரிடம் போலீஸாா் வியாழக்கிழமை தீவிர விசாரணை நடத்தினா். இந்த விசாரணை மூலம் புதிய அரசை அமைக்க விடாமல் போலீஸாா் தன்னை அச்சுறுத்தியதாக அன்வா் இப்ராஹிம் குற்றம் சாட்டினாா் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2018-இல் நடைபெற்ற பொதுத் தோ்தலில் வெற்றி பெற்று மகாதிா் முகமது பிரதமராகப் பொறுப்பேற்றாா். அவரது கூட்டணியில் அங்கம் வகித்த முஹைதீன், எதிா்க்கட்சிகளுடன் சோ்ந்து மகாதிரின் ஆட்சியைக் கவிழ்த்தாா். பிறகு, பெரும்பான்மைக்குத் தேவையானதைவிட கூடுதலாக இரண்டே எம்.பி.க்களின் ஆதரவுடன் முஹைதீன் ஆட்சியமைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com