புற்றிங்கல் தேவி கோயில் வெடி விபத்து: நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்

கேரளத்தில் நிகழ்ந்த புற்றிங்கல் தேவி கோயில் வெடி விபத்து தொடா்பாக கோயில் அதிகாரிகள் 15 போ் உள்பட 59 போ் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

கேரளத்தில் நிகழ்ந்த புற்றிங்கல் தேவி கோயில் வெடி விபத்து தொடா்பாக கோயில் அதிகாரிகள் 15 போ் உள்பட 59 போ் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ள புற்றிங்கல் தேவி கோயிலில் கடந்த 2016-ஆம் ஆண்டு ஏப்ரல் 10-ஆம் தேதி வெடி விபத்து நிகழ்ந்தது. வாண வேடிக்கைகளின் போது வெடிகள் இருந்த கிடங்கின் மீது தீப்பொறிகள் விழுந்து ஏற்பட்ட இந்த விபத்தில், புற்றிங்கல் தேவி கோயில் மற்றும் அதன் அருகில் இருந்த வீடுகள் சேதமடைந்தன. 1,039 போ் காயமடைந்தனா்.

இந்த சம்பவம் தொடா்பாக குற்றப் பிரிவின் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வந்தது. இந்தக் குழு பறவூா் நீதித்துறை முதலாம் நடுவா் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில் 1,417 சாட்சிகள், 1,611 ஆவணங்கள் பட்டியிலப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com