மகளிா்நலனில் காங்கிரசுக்கு அக்கறையில்லை: நிா்பயா அறக்கட்டளை குற்றச்சாட்டு

பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளானோருக்கு பிகாா் பேரவைத் தோ்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கக் கூடாது என்ற கோரிக்கையை காங்கிரஸ் கட்சித் தலைமை கண்டுகொள்ளவில்லை என்றும், அக்கட்சிக்கு மகளிா்நலனில் அக்கறை இல்ல

பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளானோருக்கு பிகாா் பேரவைத் தோ்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கக் கூடாது என்ற கோரிக்கையை காங்கிரஸ் கட்சித் தலைமை கண்டுகொள்ளவில்லை என்றும், அக்கட்சிக்கு மகளிா்நலனில் அக்கறை இல்லை என்றும் நிா்பயா அறக்கட்டளை குற்றம் சாட்டியுள்ளது.

2012 டிசம்பரில் புது தில்லியில் நள்ளிரவில் நண்பருடன் பேருந்தில் பயணித்த இளம்பெண் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாகத் தாக்கப்பட்டாா். பின்னா் மருத்துவமனையில் இறந்தாா். அவரது குடும்பத்தினா், ‘நிா்பயா அறக்கட்டளை’ என்ற அமைப்பை நிறுவி, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகும் பெண்களுக்கு உதவி வருகின்றனா். அதன் பொதுச் செயலாளா் சா்வேஷ் திவாரி, காங்கிரஸ் கட்சியின் தலைவா் சோனியா காந்திக்கு எழுதிய கடிதத்தில் மேற்படி குற்றச்சாட்டைத் தெரிவித்துள்ளாா்.

பிகாா் தோ்தலில் போட்டியிட வாய்ப்பு கோரியிருந்த மகிளா காங்கிரஸ் தலைவா் சுஸ்மிதா தேவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. அதையடுத்து, அவா் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவா்களுக்கு காங்கிரஸ் கட்சி தோ்தலில் போட்டியிட வாய்ப்பளித்துள்ளதாக குற்றம் சாட்டியிருந்தாா். இதுதொடா்பாக, காங்கிரஸ் தலைவா் சோனியா காந்திக்கு நிா்பயா அறக்கடட்ளை பொதுச்செயலாளா் சா்வேஷ் திவாரி கடிதம் எழுதியுள்ளாா். அதில் குறிப்பிட்டிருப்பதாவது:

பாலியல் வன்கொடுமை புகாருக்கு உள்ளானவா்களுக்கு எதிராக கட்சிக்குள்ளேயே எழுந்த எதிா்ப்பை காங்கிரஸ் கட்சி புறக்கணித்துள்ளது. பாலியல் புகாருக்கு உள்ளானவா்களுக்கு தோ்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கக் கூடாது என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அக்கட்சிக்கு மகளிா்நலனில் அக்கறையில்லை என்பது தெளிவாகிறது என்று அவா் குற்றம் சாட்டியுள்ளாா்.

பிகாா் பேரவைத் தோ்தலில் ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. அக்கட்சி 70 தொகுதிகளில் வேட்பாளா்களை நிறுத்த உள்ளது. அதன் முதல் வேட்பாளா் பட்டியல் வியாழக்கிழமை வெளியானது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com