கடந்த 24 மணி நேரத்தில் 9,70,173 மாதிரிகள் சோதனை: ஐசிஎம்ஆர் தகவல் 

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 9,70,173  கரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஎம்ஆா்) தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 9,70,173 மாதிரிகள் சோதனை
கடந்த 24 மணி நேரத்தில் 9,70,173 மாதிரிகள் சோதனை


நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 9,70,173  கரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஎம்ஆா்) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐசிஎம்ஆா் வெளியிட்ட தகவில், மத்திய மற்றும் மாநில, யூனியன் பிரதேச அரசுகள் செயல்படுத்திய நடவடிக்கைகள் வலிய மேற்கொண்ட பரிசோதனைகள் மற்றும் சரியான நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் காரணமாக, கரோனா நோய்த்தொற்றுள்ளோரை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய உதவியது. நன்கு செயல்படுத்தப்பட்ட, திறமையான மருத்துவ மேலாண்மை, தரமான கவனிப்பு நெறிமுறையின் மூலம் மிதமான மற்றும் கடுமையான நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட கரோனா நோயாளிகளிடையே அதிக மீட்பு விகிதத்தை உறுதி செய்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 61,871 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 74,94,552-ஆக அதிகரித்தது. அதே கால அளவில் 72,614 போ் குணமடைந்தனா். இவா்களுடன் கரோனாவில் இருந்து மீண்டு வந்தவா்களின் எண்ணிக்கை 65,97,209-ஆக அதிகரித்தது. மீட்பு விகிதம் தற்போது 88.03 சதவீதமாக உள்ளது. 

ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, கரோனாவுக்கு மேலும் 1033 போ் உயிரிழந்தனா். இதனால் நாடு முழுவதும் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 1,14,031-ஆக அதிகரித்தது.

கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை ஒன்றரை மாதத்துக்குப் பிறகு முதல் முறையாக 8 லட்சத்தைவிட குறைந்துள்ளது. நாடு முழுவதும் 7,83,311 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதற்கு முன்பு, கடந்த செப்டம்பா் 1-ஆம் தேதி, 7,85,996 போ் சிகிச்சை பெற்றனா். தொடா்ந்து 10-ஆவது நாளாக, சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை 8 லட்சத்துக்கும் குறைவாக உள்ளது.

நாட்டின் பரிசோதனை உள்கட்டமைப்பு கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் பரிந்துரைத்த சோதனை உத்தி பதிவு செய்யப்பட்ட அனைத்து மருத்துவப் பயிற்சியாளர்களையும் பரிசோதனைக்கு பரிந்துரைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் அக்டோபா் 17-ஆம் தேதி வரை 9 கோடியே 42 லட்சத்து 24 ஆயிரத்து 190 கரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் ஒரே நாளில் மட்டும் 9,70,173 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.  

நாடு முழுவதும் 1262 ஆய்வகங்களில் கரோனா தொற்று மாதிரி பரிசோதனைகள் செய்யப்படுகின்றன, அவற்றில்  அரசுத்துறை ஆய்வகங்கள் 889, 373 தனியார் ஆய்வகங்கள் ஆகும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com