மைசூர் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு பட்டமளிப்பு விழா: நாளை பிரதமர் மோடி காணொலிக் காட்சி வாயிலாக உரை

மைசூர் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு பட்டமளிப்பு விழா நாளை திங்கள்கிழமை (அக்.19) நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி வாயிலாகக் கலந்து கொண்டு உரை நிகழ்த்துகிறார்.
modi-18095147
modi-18095147


மைசூர் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு பட்டமளிப்பு விழா நாளை திங்கள்கிழமை (அக்.19) நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி காலை 11.15 மணிக்கு காணொலிக் காட்சி வாயிலாகக் கலந்து கொண்டு உரை நிகழ்த்துகிறார்.

கர்நாடக மாநில ஆளுநர் மற்றும் பல்கலைக்கழகத்தின் பிரமுகர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். சிண்டிகேட் மற்றும் கல்வி குழுமத்தின் உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், மேல்சபை உறுப்பினர்கள், மாவட்ட அதிகாரிகள், பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இந்த நிகழ்ச்சியில் காணொளி வாயிலாகக் கலந்து கொள்வர்.

மைசூர் பல்கலைக்கழகம்:
1916ஆம் ஆண்டு ஜூலை மாதம் 27ஆம் தேதி, மைசூர் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. இது நாட்டின் ஆறாவது மற்றும் கர்நாடக மாநிலத்தின் முதல் பல்கலைக்கழகமாகும். 'அறிவுக்கு நிகர் எதுவுமில்லை' என்பதே இந்த பல்கலைக்கழகத்தின் குறிக்கோள். 

மைசூர் சமஸ்தானத்தின் மகாராஜாவான திரு நல்வாடி கிருஷ்ணராஜ வாடியார் மற்றும் திவான் சர் எம்.வீ.  விஸ்வேஸ்வரையா ஆகியோரால் இந்த பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com