மும்பையில் மோனோ ரயில்சேவை தொடக்கம் (கோப்புப்படம்)
மும்பையில் மோனோ ரயில்சேவை தொடக்கம் (கோப்புப்படம்)

மும்பையில் மோனோ ரயில்சேவை மீண்டும் தொடக்கம்

மும்பையில் ஊரடங்கால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோனோ ஆறு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

மும்பையில் ஊரடங்கால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோனோ ஆறு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கரோனா தொற்று பரவி வந்த நிலையில் பொதுப்போக்குவரத்து சேவை முற்றிலுமாக முடக்கப்பட்டது. அந்தவகையில் பேருந்து, ரயில், மெட்ரோ ரயில் சேவைகளுடன் மோனோ ரயில் சேவையும் நிறுத்தப்பட்டது.

தற்போது நாடு முழுவதும் தொற்று பரவும் விகிதத்திற்கேற்ப மாநில அரசுகள் சார்பில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில், மகாராஷ்டிரத்தில் மோனோ ரயில் சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனையொட்டி மும்பை பெருநகர மேம்பாட்டு ஆணையம் சார்பில் மோனோ ரயில் பாதை ஆய்வு செய்யப்பட்டது. அக்டோபர் 15-ஆம் தேதி மோனோ ரயில் சேவை தொடங்க மாநில அரசு அனுமதியளித்திருந்தது. எனினும் பராமரிப்பு மற்றும் செயல்பாடு காரணமாக இன்று முதல் மோனோ ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

கரோனா தடுப்பு நடவடிக்கையாக டிக்கெட்கள் இணைய முறையில் வழங்கப்பட்டு ஸ்கேன் மூலம் அனுமதியளிக்கப்படுகிறது. மேலும் முகக்கவசம் அணியாதவர்களை ரயிலுக்குள் அனுமதிக்காத வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த மோனோ ரயில் சேவைகள் காலை 7:03 முதல் 11:40 மணி வரையும், மாலை 4:03 முதல் 9:24 மணிவரையும் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com