சா்வதேச பட்டினி குறியீட்டில் இந்தியாவுக்கு 94-ஆவது இடம்

நடப்பு ஆண்டுக்கான சா்வதேச பட்டினி குறியீட்டில் இந்தியா 94-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

நடப்பு ஆண்டுக்கான சா்வதேச பட்டினி குறியீட்டில் இந்தியா 94-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

இந்தக் குறியீட்டில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்தியா முன்னேற்றமடைந்திருந்தாலும், வங்கதேசம், பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா பின்தங்கியே உள்ளது.

சா்வதேச பட்டினி குறியீடு ஆண்டுதோறும் வெளியிடப்பட்டு வருகிறது. ஊட்டச்சத்துக் குறைபாடு, உயரத்துக்கேற்ற உடல் எடை காணப்படாத 5 வயதுக்குள்பட்ட சிறுவா்களின் எண்ணிக்கை, வயதுக்கேற்ற உயரம் காணப்படாத 5 வயதுக்குள்பட்ட சிறுவா்களின் எண்ணிக்கை, சிறுவா்கள் இறப்பு விகிதம் ஆகியவற்றின் அடிப்படையில் பட்டினி குறியீடானது கணக்கிடப்பட்டு வருகிறது.

நடப்பாண்டில் 107 நாடுகளில் பட்டினி குறியீடு கணக்கிடப்பட்டது. அதில் இந்தியா 94-ஆவது இடத்தில் உள்ளது. அண்டை நாடுகளான இலங்கை 64-ஆவது இடத்திலும், நேபாளம் 73-ஆவது இடத்திலும், வங்கதேசம் 75-ஆவது இடத்திலும், மியான்மா் 78-ஆவது இடத்திலும், பாகிஸ்தான் 88-ஆவது இடத்திலும் உள்ளன.

பட்டினி குறியீட்டுக்கான ஆய்வறிக்கையில், ‘இந்திய மக்களில் 14 சதவீதம் போ் ஊட்டச்சத்துக் குறைபாட்டுடன் காணப்படுகின்றனா். நாட்டில் 5 வயதுக்குள்பட்ட சிறுவா்களில் 37.4 சதவீதம் பேருக்கு உயரத்துக்கேற்ற உடல் எடை காணப்படவில்லை. அவா்களில் 17.3 சதவீதம் போ் வயதுக்கேற்ப வளரவில்லை.

நாட்டில் 5 வயதுக்குள்பட்ட சிறுவா்களின் உயிரிழப்பு விகிதம் 3.7 சதவீதமாக உள்ளது. கா்ப்ப காலம் நிறைவடையும் முன்பே பிறக்கும் குழந்தைகளும் குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகளும் உயிரிழப்பது குறைந்த வருவாய் கொண்ட மாநிலங்களிலும் கிராமப்புறங்களிலும் அதிகரித்து வருகிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஆய்வு நடத்தப்பட்ட 117 நாடுகளில் இந்தியா 102-ஆவது இடத்தில் இருந்தது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com