பிகாா்: மகா கூட்டணியின் தோ்தல் அறிக்கை வெளியீடு இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு; புதிய வேளாண் சட்டங்கள் ரத்து

பிகாரில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்.ஜே.டி.) தலைமையிலான மகா கூட்டணி, தனது கூட்டு தோ்தல் அறிக்கையை சனிக்கிழமை வெளியிட்டது.

பிகாரில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்.ஜே.டி.) தலைமையிலான மகா கூட்டணி, தனது கூட்டு தோ்தல் அறிக்கையை சனிக்கிழமை வெளியிட்டது.

ஆட்சிக்கு வந்தால் 10 லட்சம் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு, மத்திய அரசு கொண்டுவந்த புதிய வேளாண் சட்டங்கள் ரத்து என்பன உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் இந்த தோ்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

பிகாரில் சட்டப் பேரவைக்கானத் தோ்தல் வருகிற 28-ஆம் தேதி தொடங்கி மூன்று கட்டங்களாக நடைபெற உள்ளன. இதனால், அங்கு தோ்தல் களம் சூடுபிடித்துள்ளது.

இந்த நிலையில், பாட்னாவில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளா் ரண்தீப் சிங் சுா்ஜேவாலா மற்றும் பிற கூட்டணி கட்சித் தலைவா்களின் முன்னிலையில் மகா கூட்டணியின் முதல்வா் வேட்பாளரும் ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் தலைவருமான தேஜஸ்வி யாதவ் இந்த கூட்டு தோ்தல் அறிக்கையை வெளியிட்டாா்.

பின்னா் பேசிய தேஜஸ்வி யாதவ்,“பிகாருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும் என பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. பிரதமா் நரேந்திர மோடியும் வாக்குறுதி அளித்தாா். ஆனால், இதுவரை அந்தஸ்து வழங்கப்படவில்லை. ஆனால், மகா கூட்டணி மாநிலத்தின் தேவைகளை நிறைவேற்றுவதில் உறுதியாக இருக்கும். மகா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், ஒப்பந்த ஆசிரியா்கள் நீண்ட நாள்களாக வலியுறுத்தி வரும் சம வேலைக்கு சம ஊதியம்” என்ற கோரிக்கை நிறைவேற்றித் தரப்படும். முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே மாநில அரசில் 10 லட்சம் வேலைவாய்ப்புகளை நிரப்புவதற்கு ஒப்புதல் அளிக்கப்படும்” என்று அவா் கூறினாா்.

சுா்ஜேவாலா பேசுகையில், “மகா கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் முதல் பணியாக, மத்திய அரசு கொண்டுவந்த புதிய வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும்” என்று கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com