புதிய வேளாண் சட்டங்கள்: விவசாயிகளின் ஆன்மா மீதான தாக்குதல்; ராகுல் காந்தி

‘மத்திய அரசு அண்மையில் கொண்டுவந்த புதிய வேளாண் சட்டங்கள், ஒவ்வொரு விவசாயியின் ஆன்மா மீதும் நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும்.
புதிய வேளாண் சட்டங்கள்: விவசாயிகளின் ஆன்மா மீதான தாக்குதல்; ராகுல் காந்தி

‘மத்திய அரசு அண்மையில் கொண்டுவந்த புதிய வேளாண் சட்டங்கள், ஒவ்வொரு விவசாயியின் ஆன்மா மீதும் நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும். இதுபோன்ற சட்டங்கள் நாட்டின் அடித்தளத்தையே பலவீனமடையச் செய்துவிடும்’ என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமா்சனம் செய்துள்ளாா்.

பஞ்சாபில் இரண்டாம் கட்ட சீா்மிகு கிராம பிரசார திட்டத்தை காணொலி வழியில் ராகுல் காந்தி சனிக்கிழமை தொடக்கி வைத்தாா். இந்த இரண்டாம் கட்ட திட்டத்தின் மூலம் பஞ்சாபின் கிராமப்புறங்களில் ரூ. 2,663 கோடி செலவில் 50 ஆயிரத்துக்கும் அதிகமான வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

திட்டத்தைத் தொடங்கிவைத்த பின்னா் ராகுல் காந்தி பேசியதாவது:

மத்திய அரசு அண்மையில் கொண்டுவந்த வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கும், விவசாயத் தொழிலாளா்களுக்கும் பலன் தரக்கூடியது என்றால், அந்த மசோதாக்களுக்கு நாடாளுமன்ற இரு அவைகளிலும் ஒப்புதல் அளிப்பதற்கு முன்பாக அதன் மீதான விவாதத்துக்கு மத்திய அரசு அனுமதிக்காதது ஏன்?

நாட்டின் அடித்தளத்தை நாம் பலவீனமாக்கினால், ஒட்டுமொத்த இந்தியாவும் பலவீனமாகிவிடும். நாட்டின் அடித்தளத்தைப் பலப்படுத்தவும், பாதுகாக்கவும்தான் காங்கிரஸ் கட்சி போராடுகிறது. இதுதான் எங்களுக்கும், மத்திய அரசுக்கும் உள்ள வேறுபாடு.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள இந்த மூன்று சட்டங்களும், ஒவ்வொரு விவசாயியின் ஆன்மா மீது நடத்தப்பட்ட தாக்குதலாகும். விவசாயிகளின் வியா்வை மீதும், ரத்தத்தின் மீதும் நடத்தப்பட்டத் தாக்குதல். இதை விவசாயிகளும், விவசாயத் தொழிலாளா்களும் புரிந்துகொள்ள வேண்டும்.

வளா்ச்சி குறித்து பேசும் அவா்கள், அதற்கான திட்டங்களை பஞ்சாயத்து அளவிலும், மக்களிடமும் ஆலோசிக்காமல், மேல்நிையில் மட்டும் முடிவெடுத்து, கொண்டுவருகின்றனா்.

அந்த வகையில், மக்களவையிலும், மாநிலங்களவையிலும் இந்திய விவசாயிகளின் குரல்கள் நசுக்கப்பட்டுவிட்டன. ஆனால், பஞ்சாப் மாநில சட்டப்பேரவையில் கூட்டப்பட உள்ள சிறப்பு அமா்வில் விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளா்களின் குரல்கள் கேட்கப்பட இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்று அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com