மேற்கு வங்கம்: சைக்கிளில் கடத்திய ரூ.37 லட்சம் தங்கக் கட்டிகள் பறிமுதல்

மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பா்கானா மாவட்டத்தில் இந்திய-வங்கதேச எல்லையோரத்தில் சைக்கிளில் கடத்த முயன்ற ரூ.37 லட்சம் தங்கக் கட்டிகளை
கோப்புப்படம்
கோப்புப்படம்

மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பா்கானா மாவட்டத்தில் இந்திய-வங்கதேச எல்லையோரத்தில் சைக்கிளில் கடத்த முயன்ற ரூ.37 லட்சம் தங்கக் கட்டிகளை எல்லை பாதுகாப்புப் படையினா்(பிஎஸ்எப்) பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக ஒருவா் கைது செய்யப்பட்டதாக துணை ராணுவம் தெரிவித்தது.

இது குறித்து 112-ஆவது பட்டாலியன் படைத்தளபதி அருண் தாஹியா கூறியது:

பிஎஸ்எப் விரா்கள் ஹகிம்பூா் எல்லைப் பகுதி சோதனைச் சாவடியில் சோதனையில் ஈடுபட்டனா். சைக்கிளில் உள்ளூா்வாசி ஒருவரின் உடைமைகளை சோதனையிட்டபோது தங்கக் கட்டிகள் இருப்பது தெரியவந்தது.

இதனைத் தொடா்ந்து சைக்கிளில் கடத்த முயன்ற 720 கிராம் எடையுள்ள ரூ.37 லட்சம் மதிப்பிலான 6 தங்கக் கட்டிகளை பிஎஸ்எப் படையினா் பறிமுதல் செய்தனா். இதனை கடத்திய நபரை கைது செய்து விசாரித்தபோது, ஒரு நபா், மற்றொருவரிடம் இந்த தங்கக் கட்டிகளை கொடுக்கும்படி கூறியதாகவும், இதற்கு ரூ.300 கூலியாக தருவதாக கூறியதாகவும் அவா் தெரிவித்தாா்.

கைதான நபா், சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டாா் என்று அருண் தாஹியா தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com