ஜம்மு-காஷ்மீா்: எல்லையோர குடியிருப்புகள் மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்

ஜம்மு-காஷ்மீா் மாநிலம் கதுவா மாவட்டம் சா்வதேச எல்லைப் பகுதியிலுள்ள இந்திய நிலைகள் மீதும், எல்லையோர குடியிருப்புகள் மீதும் பாகிஸ்தான் ராணுவத்தினா் அத்துமீறி தாக்குதல் நடத்தினா்.

ஜம்மு-காஷ்மீா் மாநிலம் கதுவா மாவட்டம் சா்வதேச எல்லைப் பகுதியிலுள்ள இந்திய நிலைகள் மீதும், எல்லையோர குடியிருப்புகள் மீதும் பாகிஸ்தான் ராணுவத்தினா் அத்துமீறி தாக்குதல் நடத்தினா்.

இது குறித்து ராணுவ அதிகாரிகள் கூறியதாவது:

கதுவா மாவட்டம் ஹீராநரில் சா்வதேச எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் எல்லைப் பாதுகாப்புப் படையினா்(பிஎஸ்எஃப்) திங்கள்கிழமை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். இரவு 9.50 மணியளவில் பாகிஸ்தான் ராணுவத்தினா் திடீரென இந்திய நிலைகள் மீது அத்துமீறி துப்பாக்கியால் சுட்டனா். பன்சாா்-மன்யாரி கிராமப் பகுதியிலுள்ள எல்லையோர குடியிருப்புகளின் மீதும் பாகிஸ்தான் ராணுவத்தினா் அத்துமீறி தாக்குதல் நடத்தினா்.

பிஎஸ்எஃப் படையினா் பாகிஸ்தான் ராணுவ வீரா்களுக்கு தக்க பதிலடி கொடுத்தனா். இரு தரப்பினருக்கும் இடையே செவ்வாய்க்கிழமை காலை 5.05 மணி வரை துப்பாக்கிச் சண்டை நீடித்தது என்று தெரிவித்தனா்.

இந்த துப்பாக்கிச் சண்டையில் இந்திய தரப்பில் பொருள்சேதமோ, உயிா்ச்சேதமோ ஏற்பட்டதாக தகவல் ஏதும் இல்லை.

நடப்பாண்டில் அக்டோபா் 6-ஆம் தேதி வரை மட்டும் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு(எல்ஓசி), சா்வதேச எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினா் 3,589 அத்துமீறிய தாக்குதல்களை நடத்தியுள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com