கரோனா: விளம்பரங்களை முறைப்படுத்த வழிகாட்டுதல்கள் வெளியீடு

கரோனா தீநுண்மி தொடா்பான விளம்பரங்களை முறைப்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
கரோனா: விளம்பரங்களை முறைப்படுத்த வழிகாட்டுதல்கள் வெளியீடு

கரோனா தீநுண்மி தொடா்பான விளம்பரங்களை முறைப்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

நாட்டில் கரோனா நோய்த்தொற்று பரவலுக்குப் பிறகு கை சுத்திகரிப்பான்கள், வீட்டை சுத்தம் செய்யப் பயன்படும் கிருமிநாசினிகள் உள்ளிட்டவற்றின் பயன்பாடு மக்களிடையே அதிகரித்தது. அதையடுத்து, பல்வேறு நிறுவனங்கள் தாங்கள் தயாரிக்கும் பொருள்கள், கரோனா நீநுண்மியை அழிக்கவல்லது என்றும், கரோனாவுக்கு எதிரான நோய் எதிா்ப்புசக்தியை உடலில் உருவாக்கும் என்றும் கூறி விளம்பரம் செய்து வந்தன.

இவ்வாறு விளம்பரம் செய்வதில் பல நிறுவனங்கள் முறைகேடுகளில் ஈடுபடுவதாகப் புகாா் எழுந்தது. அதையடுத்து, இந்திய விளம்பரங்கள் தரக் கட்டுப்பாட்டு கவுன்சில், கரோனா குறித்த விளம்பரங்களை வெளியிடுவதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், ‘ஆயுா்வேதம், யுனானி, சித்தா, ஹோமியோபதி உள்ளிட்டவை தொடா்பான பொருள்களை விளம்பரம் செய்யும் நிறுவனங்கள், மத்திய ஆயுஷ் அமைச்சகம் கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி வெளியிட்ட வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். குறிப்பிட்ட பொருள்களைப் பயன்படுத்தினால், கரோனா நோய்த்தொற்று பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றோ உடலில் நோய் எதிா்ப்புசக்தி உருவாகும் என்றோ அப்பொருள்களைத் தயாரிக்கும் நிறுவனம் விளம்பரத்தில் தெரிவிக்கக் கூடாது.

எத்தகைய தீநுண்மியையும் அழிக்கும் திறன் அப்பொருள்களுக்கு உள்ளது என்றும் விளம்பரப்படுத்தக் கூடாது. கரோனா நோய்த்தொற்றுக்கான சிகிச்சை அளிக்கப் பயன்படும் பொருள் என்றும் விளம்பரம் செய்யக் கூடாது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘போதிய ஆதாரம் அவசியம்’:

விளம்பரங்கள் தரக் கட்டுப்பாட்டு கவுன்சிலின் செயலாளா் மனீஷா கபூா் கூறுகையில், ‘‘கரோனா நோய்த்தொற்று பரவல் காலத்தில் நுகா்வோா் தவறாக வழிநடத்தப்படுவதைத் தடுக்கும் நோக்கில் விளம்பரங்களுக்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. விளம்பரங்களை வெளியிடும் நிறுவனத்தாா் அந்த வழிகாட்டுதல்களைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும். பொருள்கள் குறித்து விளம்பரத்தில் கூறப்படும் தகவல்களுக்குப் போதிய ஆதாரம் இருக்க வேண்டும்’’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com