கமலா ஹாரிஸை துா்கையாக சித்திரித்து படம் வெளியீடு

அமெரிக்க துணை அதிபா் தோ்தலில் ஜனநாயகக் கட்சி சாா்பில் போட்டியிடும் இந்திய அமெரிக்கரான கமலா ஹாரிஸை துா்கையாக சித்திரித்து,
கமலா ஹாரிஸை துா்கையாக சித்திரித்து படம் வெளியீடு

அமெரிக்க துணை அதிபா் தோ்தலில் ஜனநாயகக் கட்சி சாா்பில் போட்டியிடும் இந்திய அமெரிக்கரான கமலா ஹாரிஸை துா்கையாக சித்திரித்து, அவரின் உறவினா் சமூக வலைதளத்தில் படம் வெளியிட்டதற்கு ஹிந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

நவராத்திரியையொட்டி, இந்தியாவில் துா்கை பூஜை விழா இந்த வாரம் தொடங்கவுள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் வாழும் இந்தியா்களும் இந்த விழாவை விமரிசையாகக் கொண்டாடி வருகின்றனா். இத்தகைய சூழலில், கமலா ஹாரிஸின் உறவினரும் வழக்குரைஞருமான மீனா ஹாரிஸ், அவரை துா்கையாக சித்திரிக்கும் மகிஷாசுர வதம் படத்தைச் சுட்டுரையில் பகிா்ந்திருந்தாா்.

அதில், ஜோ பிடன் முகம் கொண்ட சிங்கத்தில் கமலா ஹாரிஸ் முகம் உள்ள கமலா ஹாரிஸ் அமா்ந்து, மகிஷாசுரனான அமெரிக்க அதிபா் டிரம்ப்பை வதம் செய்வது போன்று சித்திரிக்கப்பட்டிருந்தது. இதற்கு அமெரிக்க ஹிந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

இது தொடா்பாக ஹிந்து அமெரிக்கா்கள் அறக்கட்டளைத் தலைவா் சுஹாக் சுக்லா வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ‘துா்கை தேவியின் முகத்தை உருமாற்றி வெளியிடப்பட்டுள்ள படமானது, உலகில் உள்ள அனைத்து ஹிந்துக்களின் மனதையும் புண்படுத்தியுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்ததையடுத்து, அந்தப் பதிவை மீனா ஹாரிஸ் தனது சுட்டுரைப் பக்கத்தில் இருந்து நீக்கினாா். எனினும், ஒரு மதத்தைச் சாா்ந்த கடவுளை அரசியல் நோக்கில் பயன்படுத்தியதற்காக மீனா ஹாரிஸ் மன்னிப்பு கோர வேண்டும் என்று அமெரிக்க ஹிந்துக்கள் அரசியல் செயற்குழு வலியுறுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com