
Telangana's Covid recovery rate crosses 90%
தெலங்கானாவில் மீட்புவிகிதம் 90 சதவீதத்தைத் தாண்டியுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
புதன்கிழமை நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,811 பேர் கரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். இதையடுத்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 2,04,388 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் மீட்பு விகிதம் 90.38 ஆக உள்ளது.
மேலும், தெலங்கானாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,579 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பரவல் கண்டறியப்பட்டுள்ளன.
புதிதாக பாதிக்கப்பட்டவர்களை தொடர்ந்து இதுவரை மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,26 லட்சமாக அதிகரித்துள்ளது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 20,449 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 5 பேர் உயிரிழந்ததால், இதுவரை மொத்தமாக கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,287-ஆக அதிகரித்துள்ளது.
மேலும், கடந்த ஒரேநாளில் 41,475 சோதனைகள் செய்யப்பட்ட நிலையில், மாநிலத்தில் இதுவரை 39,40,304 லட்சம் பரிசோதனைகள் மேற்கொண்டுள்ளனர் என்று சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.