புதிய நாடாளுமன்றக் கட்டட கட்டுமானப் பணிகள் டிசம்பரில் தொடக்கம்

ரூ.861.90 கோடியில் கட்டப்படும் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் கட்டுமானப் பணிகள் நடப்பாண்டு டிசம்பரில் தொடங்கப்படும் என மக்களவை செயலர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய நாடாளுமன்ற வளாகம்
தற்போதைய நாடாளுமன்ற வளாகம்

ரூ.861.90 கோடியில் கட்டப்படும் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் கட்டுமானப் பணிகள் நடப்பாண்டு டிசம்பரில் தொடங்கப்படும் என மக்களவை செயலர் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் மறுமேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், தற்போது இருக்கும் நாடாளுமன்ற கட்டடத்தைப் போன்றே புதிய நாடாளுமன்ற கட்டடம், முக்கோண வடிவில் கட்டப்படவுள்ளது. தொகுதி மறுவரையறை செய்யப்பட்ட பிறகு, மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதற்கேற்ப சுமார் 1,400 பேர் வரை அமரும் வகையில் புதிய கட்டடம் இருக்கும்.

இந்நிலையில் புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் கட்டுமானம் இந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கி 2022 அக்டோபருக்குள் நிறைவடையும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

புதிய பாராளுமன்ற கட்டடத்திற்கான கட்டுமானப் பணிகளின் போது காற்று மற்றும் ஒலி மாசுபாட்டைக் கட்டுப்படுத்த போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும், இது அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தனித்தனி அலுவலகங்களைக் கொண்டிருக்கும் என்றும் மக்களவை செயலர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றக் கட்டடத்தின் கட்டுமானப் பணிகளை மேற்பார்வையிட கண்காணிப்புக் குழு அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மக்களவை செயலகம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம், கட்டுமானத் திட்டத்தின் கட்டிடக் கலைஞர் / வடிவமைப்பாளர் ஆகியோர் இடம்பெறுவர்.

கடந்த மாதம், டாடா ப்ராஜெக்ட்ஸ் லிமிடெட் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை ரூ.861.90 கோடி செலவில் கட்டும் ஒப்பந்தத்தைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com