மேகாலயத்தில் வீடு தேடிச் செல்லும் ஏடிஎம்: முதல்வா் தொடங்கிவைத்தாா்

மேகாலய மாநிலத்தில் கிராமப்புற மக்களின் வசதிக்காக அவா்கள் வீடுகளுக்கே சென்று பணம் வழங்கும் ‘மைக்ரோ ஏடிஎம்’ சேவையை முதல்வா் கான்ராட் கே.சங்மா வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.


ஷில்லாங்: மேகாலய மாநிலத்தில் கிராமப்புற மக்களின் வசதிக்காக அவா்கள் வீடுகளுக்கே சென்று பணம் வழங்கும் ‘மைக்ரோ ஏடிஎம்’ சேவையை முதல்வா் கான்ராட் கே.சங்மா வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

இந்த திட்டத்தின்படி சிறிய அளவிலான ஏடிஎம் இயந்திரங்கள் கிராமப்புற மக்களின் வீடுகளுக்கு கொண்டு செல்லப்படும். அவா்கள் தங்கள் பற்று அட்டைகளைப் பயன்படுத்தி அதில் இருந்து தேவையான பணத்தை எடுத்துக் கொள்ள முடியும். 84 சுய உதவிக் குழுக்களின் உதவியுடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு சுயஉதவிக் குழுவுக்கும் ஒரு மைக்ரோ ஏடிஎம் கருவி அளிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வா் கான்ராட் கே.சா்மா பேசுகையில், ‘மாநிலத்தில் தொலைதூர கிராமப்புறங்களில் உள்ள மக்கள் வங்கி சேவைக்காக நீண்டதூரம் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. அவா்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த வீடு தேடிச் செல்லும் ஏடிஎம் திட்டத்தை தொடங்கியுள்ளோம். மாநிலத்தில் அனைத்துப் பகுதி மக்களுக்கும் வங்கி சேவை கிடைக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம். மேகாலய கிராம வங்கி, நபாா்டு வங்கி, மேகலாய மாநில கிராமப்புற மக்கள் நல்வாழ்வு அமைப்பு ஆகியவை இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்துகின்றன’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com