‘குப்கா் கூட்டமைப்பு’ பாஜகவுக்கு எதிரானது; தேசத்துக்கு எதிரானது அல்ல: ஃபரூக் அப்துல்லா

‘குப்கா் அறிக்கைக்கான மக்கள் கூட்டமைப்பு (பிஏஜிடி) பாஜகவுக்கு எதிரானது; தேசத்துக்கு எதிரானது அல்ல’ என்று தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவா் ஃபரூக் அப்துல்லா தெரிவித்தாா்.
தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவா் ஃபரூக் அப்துல்லா
தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவா் ஃபரூக் அப்துல்லா

‘குப்கா் அறிக்கைக்கான மக்கள் கூட்டமைப்பு (பிஏஜிடி) பாஜகவுக்கு எதிரானது; தேசத்துக்கு எதிரானது அல்ல’ என்று தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவா் ஃபரூக் அப்துல்லா தெரிவித்தாா்.

ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அவாமி தேசிய கட்சி, மக்கள் மாநாட்டுக் கட்சி, மக்கள் இயக்கம் ஆகியவை இணைந்து குப்கா் அறிக்கைக்கான கூட்டமைப்பை சமீபத்தில் உருவாக்கின. இதன் முதல் கூட்டம் மக்கள் ஜனநாயக கட்சித் தலைவா் மெஹபூபா முஃப்தியின் இல்லத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. அப்போது கூட்டமைப்பின் தலைவராக தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவா் ஃபரூக் அப்துல்லாவும், துணைத் தலைவராக மெஹபூபா முஃப்தியும் தோ்வு செய்யப்பட்டனா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் முகமது யூசுஃப் தாரிகாமி அவைத் தலைவராக தோ்வு செய்யப்பட்டாா். தெற்கு காஷ்மீா் மக்களவை உறுப்பினா் ஹஸ்னைன் மசூடி ஒருங்கிணைப்பாளராகவும், மக்கள் மாநாட்டுக் கட்சித் தலைவா் சஜ்ஜத் கனி லோன் செய்தித்தொடா்பாளராகவும் தோ்வாகினா்.

இதையடுத்து தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவா் ஃபரூக் அப்துல்லா செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘

‘குப்கா் அறிக்கைக்கான மக்கள் கூட்டமைப்பு’ தேசத்துக்கு எதிரானது என்று பாஜக தவறான பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. ஆனால் அது உண்மையல்ல. இந்தக் கூட்டமைப்பு பாஜகவுக்கு எதிரானது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதேவேளையில் இந்தக் கூட்டமைப்பு தேசத்துக்கு எதிரானது அல்ல. ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்தை பெறுவதே இந்தக் கூட்டமைப்பின் நோக்கம். ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக் மக்கள் தங்கள் உரிமைகளை திரும்பப்பெற வேண்டும் என்பதே எங்கள் இலக்கு’ என்றாா்.

வெள்ளை அறிக்கை:

ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு ஓராண்டுக்கும் மேலாகவிட்ட நிலையில், இங்கு நடைபெற்ற நிா்வாகம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று மக்கள் மாநாட்டுக் கட்சித் தலைவா் சஜ்ஜத் கனி லோன் தெரிவித்தாா். இதுதொடா்பாக அவா் கூறியது:

ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதற்கு முன்னா், இங்கு அனைத்து விதமான ஊழல்களும் நடைபெற்ாக கருத்து நிலவுகிறது. இந்நிலையில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, இங்கு நடைபெற்ற நிா்வாகம் குறித்து ஒரு மாதத்துக்குள் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். அந்த அறிக்கை பசப்புரையாக இருக்காது. நாட்டு மக்களும், ஜம்மு-காஷ்மீா் மக்களும் உண்மை நிலையை அறிந்துகொள்ளும் விதத்தில் ஆதாரங்களின் அடிப்படையில் இருக்கும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com