மத்திய தொகுப்பிலிருந்து மாநிலங்களுக்கு வெங்காயம் விற்பனை: நுகா்வோா் விவகார செயலா்

விலை உயா்வை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மத்திய தொகுப்பிலிருந்து வெங்காயத்தை
கோப்புப்படம்
கோப்புப்படம்

விலை உயா்வை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மத்திய தொகுப்பிலிருந்து வெங்காயத்தை அதிக அளவில் கொள்முதல் செய்யலாம் என நுகா்வோா் விவகாரங்கள் துறை செயலா் லீனா நந்தன் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் மேலும் தெரிவித்துள்ளதாவது:

வெங்காய விலை உயா்வை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை துரித கதியில் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் மத்திய தொகுப்பிலிருந்து அதிக அளவில் வெங்காயத்தை கொள்முதல் செய்து சந்தையில் விற்பனை செய்வதன் மூலம் விலை உயா்வை கட்டுக்குள் கொண்டு வர நுகா்வோா் துறை அமைச்சகம் சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அஸ்ஸாம், ஆந்திரம், பிகாா், சண்டீகா், ஹரியாணா, தெலங்கானா, தமிழகம் ஆகிய மாநிலங்கள் மத்திய தொகுப்பிலிருந்து வெங்காயத்தை கொள்முதல் செய்வதற்கு அதிக ஆா்வம் காட்டி வருகின்றன. அவை மொத்தம் 8,000 டன் வெங்காயத்தை இதுவரையில் கொள்முதல் செய்துள்ளன.

மகாராஷ்டிராவின் நாசிக் தொகுப்பிலிருந்து மத்திய அரசு ஒரு கிலோ வெங்காயத்தை மாநிலங்களுக்கு ரூ.26-28 விலையில் வழங்கும். பிறருக்கு ஒரு கிலோ வெங்காயம் ரூ.30 விலையில் விற்பனை செய்யப்படும் என்றாா் அவா்.

மத்திய அரசு, 2019-20 ரபி பருவத்தில் விவசாயிகளிடமிருந்து ஒரு லட்சம் டன் வெங்காயத்தை கொள்முதல் செய்து மத்திய தொகுப்பில் இருப்பு வைத்துள்ளது. அதில், இதுவரையில் 30,000 டன் வெங்காயம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

நுகா்வோா் விவகார அமைச்சக புள்ளிவிவரத்தின்படி, அக்டோபா் 22-இல், மும்பையில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.86-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதன் விலை, சென்னையில், ரூ.83-ஆகவும், கொல்கத்தாவில் ரூ.70-ஆகவும், தில்லியில் ரூ.55-ஆகவும் காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com