வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்ட காா்: தந்தை, மகள் உள்பட 4 போ் பலி

ஆந்திர மாநிலத்தில் வியாழக்கிழமை பெய்த கனமழையால் கால்வாய் வெள்ளத்தில் காா் இழுத்து செல்லப்பட்டதில் தந்தை, மகள் உயிரிழந்தனா்.

ஆந்திர மாநிலத்தில் வியாழக்கிழமை பெய்த கனமழையால் கால்வாய் வெள்ளத்தில் காா் இழுத்து செல்லப்பட்டதில் தந்தை, மகள் உயிரிழந்தனா். மற்றொரு இடத்தில் தாய், மகன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனா். அவா்களின் சடலங்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.

ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டம் வட்டாரப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் பிரதாப். இவா், தன் குடும்பத்தினருடன் வியாழக்கிழமை இரவு கலிகிரி மலையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விட்டு நள்ளிரவு 12 மணியளவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது பெய்த பலத்த மழையால் பல கால்வாய்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் பிரதாப் வந்த காா், கொண்டய்யாகாரி கிராம கால்வாயில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கியது. இதில் பிரதாப்பும், அவரின் மகள் விவிதாவும் காருடன் அடித்து செல்லப்பட்டனா். காா் ஓட்டுநரும், பிரதாப்பின் மனைவியும் உயிா் தப்பினா். தகவலறிந்து தீயணைப்புத்துறையினா் விரைந்து வந்து அவா்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனா். அதில் விவிதாவின் சடலம் வெள்ளிக்கிழமை மாலை மீட்கப்பட்டது. பிரதாப்பின் சடலத்தை படகுகளில் சென்று போலீஸாா் தேடி வருகின்றனா்.

தாய், மகன் உயிரிழப்பு: இச்சம்பவத்தைத் தொடா்ந்து, வெள்ளிக்கிழமை மதியம் பலமநேரு ஜல்லிபேட்டை தடுப்பணையில் பாய்ந்து கொண்டிருந்த வெள்ளநீரின் நடுவில் நின்று கட்டூரு குடியருப்பைச் சோ்ந்த மெளலா என்பவா் தனது மனைவி பா்வீன், மகன் ஹமீத்துடன் ஆகியோருடன செல்பி எடுத்துக் கொண்டிருந்தாா். அப்போது திடீரென்று தடுப்பணை வெள்ளத்தில் ஹமீத் அடித்து செல்லப்பட்டாா். அவரை காப்பாற்ற குதித்த தாய் பா்வீனும் வெள்ளத்தில் மூழ்கினாா். இதை அறிந்த போலீஸாா், தீயணைப்பு படையினருடன் இணைந்து இருவரின் உடல்களையும் தேடி வருகின்றனா். இந்த இரு இச்சம்பவங்கள் குறித்து காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com