நிலக்கரி ஊழல் வழக்கு: முன்னாள் மத்திய அமைச்சருக்கு 3 ஆண்டு சிறை

நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு முறைகேடு ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் திலீப் ரேய்க்கு தில்லி சிறப்பு நீதிமன்றம் 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்துள்ளது. 
Former union minister Dilip Ray
Former union minister Dilip Ray

Coal scam: Ex-Minister Dilip Ray awarded 3-year jail term 

புதுதில்லி: நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு முறைகேடு ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் திலீப் ரேய்க்கு தில்லி சிறப்பு நீதிமன்றம் 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்துள்ளது. 

கடந்த 1999-ல் வாஜ்பாய் தலைமையிலான அரசில் நிலக்கரித்துறை இணை அமைச்சராக இருந்தவர் திலீப் ரேய். 

அவர் பதவி வகிக்கும்போது சிஎல்டி நிறுவனத்திற்கு முறைகேடாக ஒதுக்கிய வழக்கில், திலீப் ரேய்க்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தில்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

திலீப் ரேயுடன் மேலும் இருவருக்கு மூன்று ஆண்டு தண்டனையும் தலா ரூ.10 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com