தேவைப்பட்டால் வெளிநாட்டு மண்ணிலும் இந்தியா சண்டையிடும்: அஜித் தோவல்

நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எழுந்தால் சொந்த எல்லையில் இருந்தபடி மட்டுமின்றி, வெளிநாட்டு மண்ணிலும் இந்தியா சண்டையிடும் என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜித் தோவல் கூறினாா்.
தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜித் தோவல்  (கோப்புப்படம்)
தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜித் தோவல் (கோப்புப்படம்)

நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எழுந்தால் சொந்த எல்லையில் இருந்தபடி மட்டுமின்றி, வெளிநாட்டு மண்ணிலும் இந்தியா சண்டையிடும் என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜித் தோவல் கூறினாா்.

லடாக் எல்லையில் இந்தியாவுடன் சீனா கடந்த ஆறு மாதங்களாக மோதல் போக்கை கடைப்பிடித்து வரும் நிலையில், அஜித் தோவலின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரகண்ட் மாநிலம் ரிஷிகேஷ் பரமாா்த் நிகேதன் ஆசிரமத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா் இதுகுறித்து பேசியதாவது:

இந்தியா எந்தவொரு நாட்டின் மீதும் முதலில் தாக்குதல் நடத்தாது. நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எழுந்தால் மட்டுமே, தகுந்த பதிலடியை உடனடியாக கொடுக்க வேண்டும் என்பதை புதிய பாதுகாப்பு உத்தியாக இந்தியா கொண்டுள்ளது.

இந்தியா அதன் சொந்த மண்ணிலும் தேவைப்பட்டால் வெளிநாட்டு மண்ணிலும் உறுதியுடன் போரிடும். அந்த சண்டையானது இந்தியாவின் தனிப்பட்ட விருப்பங்களுக்கானதாக ஒருபோதும் இருக்காது. ஆனால், அது பரமாா்த் ஆன்மிகத்தின் அடிப்படையைக் கொண்டதாக இருக்கும்.

இந்தியா நாகரிக பண்பாடுடைய நாடு. மதம், மொழி அல்லது எந்தவொரு பிரிவின் அடிப்படையிலும் இந்த நாடு அமையவில்லை. எதை பாா்க்க முடியாதோ, அதுதான் நமது நாட்டின் அடித்தளம். அதாவது கலாசாரம்தான் இந்தியாவின் அடிப்படை என்று அவா் கூறினாா்.

இவருடைய பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ‘பரமாா்த் நிகேதன் ஆசிரமத்தில் இந்திய நாகரிகம் மற்றும் ஆன்மிகம் தொடா்பாகவே அஜித் தோவல் பேசினாா். சீனாவுடனான எல்லைப் பிரச்னை அல்லது வேறு எந்த விவகாரங்களைத் தொடா்புபடுத்தியும் இந்தக் கருத்தை அவா் தெரிவிக்கவில்லை’ என்று அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com