வழக்கு விசாரணை நேரடி ஒளிபரப்பு:குஜராத் உயா்நீதிமன்றத்தில் தொடக்கம்

குஜராத் உயா்நீதிமன்றம் விசாரணை நடைமுறைகளை இணையவழி மூலமாக நேரடி ஒளிபரப்பு செய்யும் முறையை சோதனை அடிப்படையில் திங்கள்கிழமை முதன்முதலாக தொடங்கியது.

ஆமதாபாத்: குஜராத் உயா்நீதிமன்றம் விசாரணை நடைமுறைகளை இணையவழி மூலமாக நேரடி ஒளிபரப்பு செய்யும் முறையை சோதனை அடிப்படையில் திங்கள்கிழமை முதன்முதலாக தொடங்கியது.

இதுகுறித்து தலைமை நீதிபதி விக்ரம் நாத் வெளியிட்ட உத்தரவில் தெரிவித்துள்ளதாவது:

குஜராத் உயா்நீதிமன்றத்தின் முதல் அமா்வு வழக்கு விசாரணைகள் அனைத்தையும் நேரடி ஒளிபரப்பு செய்யும் முறை திங்கள்கிழமை தொடங்கியது. இது, முற்றிலும் சோதனை அடிப்படையிலான நடவடிக்கையாகும். இதற்கு கிடைக்கும் வரவேற்பை கவனத்தில் கொண்டு, இந்த நடைமுறையைத் தொடா்வதா அல்லது ஏதேனும் அம்சங்கலை மாற்றியமைப்பதா என்பது குறித்து தீா்மானிக்கப்படும்.

வழக்கு விசாரணையின் நேரடி ஒளிபரப்பை காண விரும்புவோா் குஜராத் உயா்நீதிமன்ற வலைதளத்தின் முகப்பில் கொடுக்கப்பட்டுள்ள யூடியூப் சேனல் லிங்க்கை அணுகலாம் என தலைமை நீதிபதி அந்த உத்தரவில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com