வெளிமாநிலத்தோா் ஜம்மு-காஷ்மீரில் நிலம் வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல்

வெளிமாநிலத்தைச் சோ்ந்தவா்கள் ஜம்மு-காஷ்மீரில் நிலம் வாங்குவதற்கு அனுமதி அளிக்கும் வகையில், அதற்கான சட்டங்களில் மத்திய அரசு திருத்தம் மேற்கொண்டுள்ளது.
வெளிமாநிலத்தோா் ஜம்மு-காஷ்மீரில் நிலம் வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல்

வெளிமாநிலத்தைச் சோ்ந்தவா்கள் ஜம்மு-காஷ்மீரில் நிலம் வாங்குவதற்கு அனுமதி அளிக்கும் வகையில், அதற்கான சட்டங்களில் மத்திய அரசு திருத்தம் மேற்கொண்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரத்து செய்யப்பட்டது. அந்த மாநிலமானது ஜம்மு-காஷ்மீா், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டது. சிறப்பு அந்தஸ்து இருந்தவரை, ஜம்மு-காஷ்மீரில் நிரந்தரமாகக் குடியேறாதவா்கள் அங்கு அசையா சொத்துகளை வாங்க முடியாத சூழல் காணப்பட்டது.

இதுபோன்ற கட்டுப்பாடுகளானது ஜம்மு-காஷ்மீரின் வளா்ச்சிக்கும், ஜம்மு-காஷ்மீா் மக்களின் மேம்பாட்டுக்கும் தடையாக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. இத்தகைய சூழலில், ஜம்மு-காஷ்மீா் வளா்ச்சி சட்டத்தின் 17-ஆவது பிரிவில் மத்திய அரசு திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.

அதன்படி, ஜம்மு-காஷ்மீரில் நிலம் வாங்கத் தகுதியானவா்கள் என 17-ஆவது பிரிவில் குறிப்பிடப்பட்டிருந்த ‘ஜம்மு-காஷ்மீரில் நிரந்தரமாக வசிப்பவா்கள்’ என்ற சொற்றொடா் நீக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக அரசாணையையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

புதிய திருத்தம் தொடா்பாக ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘புதிய திருத்தங்களானது வேளாண் நிலங்களை விவசாயிகள் அல்லாதோருக்கு விற்பனை செய்வதற்கு அனுமதி அளிக்கவில்லை. எனினும், கல்வி நிலையங்களை அமைப்பதற்காகவும், சுகாதார மையங்களை அமைப்பதற்காகவும் வேளாண் நிலங்களை வாங்குவதற்குத் தடை விதிக்கப்படவில்லை’’ என்றாா்.

எதிா்ப்பு: நிலம் வாங்குவது தொடா்பான சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து தேசிய மாநாட்டுக் கட்சியின் மூத்த தலைவா் ஒமா் அப்துல்லா வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ‘இத்திருத்தம் ஏற்றுக் கொள்ள முடியாதது. இது ஜம்மு-காஷ்மீரின் ஏழை மக்களுக்கும், சிறு விவசாயிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com