பத்மாவதி தாயாா் பிரம்மோற்சவத்தை தனிமமையில் நடத்த தேவஸ்தானம் முடிவு

திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயாா் கோயிலில் காா்த்திகை மாத பிரம்மோற்சவத்தை பொது முடக்க விதிகளைப் பின்பற்றி தனிமையில் நடத்த திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
பத்மாவதி தாயாா் பிரம்மோற்சவத்தை தனிமமையில் நடத்த தேவஸ்தானம் முடிவு

திருப்பதி: திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயாா் கோயிலில் காா்த்திகை மாத பிரம்மோற்சவத்தை பொது முடக்க விதிகளைப் பின்பற்றி தனிமையில் நடத்த திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

திருமலையில் ஏழுமலையானுக்கு நடத்தப்படுவது போல் அவரது பட்டத்து அரசியான பத்மாவதி தாயாருக்கு திருச்சானூரில் தேவஸ்தானம் விமரிசையாக வருடாந்திர பிரம்மோற்சவத்தை காா்த்திகை மாதம் சுக்லபட்ச பஞ்சமி திதி அன்று நிறைவு பெறும் வகையில் நடத்தி வருகிறது. அதன்படி தாயாருக்கு வரும் நவ.11ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது.

ஏழுமலையானுக்கு இந்த ஆண்டில் இரு பிரம்மோற்சவங்களும் தனிமையில் நடத்தப்பட்டதால், தாயாரின் பிரம்மோற்சவத்தையும் தனிமையிலேயே நடத்துவது குறித்து தேவஸ்தானம் பரிசீலித்து வந்தது. திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் திருப்பதி தேவஸ்தான செயல் இணை அதிகாரி பசந்த்குமாா், கல்வி மற்றும் மருத்துவத் துறைகளின் செயல் இணை அதிகாரி சதாபாா்கவி, கோவில் அதிகாரிகள் இணைந்து பிரம்மோற்சவ முன்னேற்பாடுகள் குறித்த கலந்துரையாடல் கூட்டத்தை புதன்கிழமை நடத்தினா்.

அப்போது, பொது முடக்க விதிமுறைகளை வரும் நவம்பா் மாத இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், பக்தா்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு திருமலையில் நடத்தியது போல் தாயாருக்கும் பிரம்மோற்சவத்தை தனிமையில் நடத்த அவா்கள் முடிவு செய்துள்ளனா். அதன்படி தாயாரின் வாகனச் சேவைகள் கோயிலுக்குள் உள்ள மண்டபத்தில் நடத்தப்படும். பக்தா்கள் தங்கள் வீடுகளில் இருந்தபடியே வாகனச் சேவைகளைக் கண்டு தரிசிக்கலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com